புதன், 11 ஜனவரி, 2012

பொங்கல் இதழ்


ஆய்வு4;தோய்வு 1                                                                 சுறவம்,2043 / சனவரி,2012
    ஆய்வுத்தமிழ்
ஆசிரியர்: முனைவர் பா.இறையரசன்                                       இணை ஆசிரியர்: கோ.கண்ணன்
ஆசிரியர் குழு:  தனித்தமிழ்வேங்கை  மறத்தமிழ்வேந்தன்,  தா.இளங்குமரன் ,சிங்கபுரம்,  சுந்தர் செயபாலன்,அமெரிக்கா
                                                        எழுத்தேணி அறக்கட்டளை வெளியீடு.


------------------------------------------------------------------------------------------------------------


திருவள்ளுவர் ஆண்டு  2043 பிறக்கிறது!
உலகத் தமிழர்களின் வாழ்வு சிறக்கட்டும்!
உழவர் திரு நாளில்
நம் நிலம், ஆறு, மணல் கொள்ளை தடுக்கச் சூளுரைப்போம்!                            

சிற்றூர்களையும் ஆறுகளையும் காடுகளையும் மலைகளையும் கடலையும் பாதுகாத்து - உணவூட்டும் உழவுக்கும் தொழிலுக்கும்உழவர்க்கும் பாட்டாளிகளுக்கும்  மீனவர்களுக்கும்  ஆக்கம் சேர்ப்போம்!

திருவள்ளுவரைப் போற்றி அவர்தம் திருக்குறளைப் பின்பற்றுவோம்!
மாடுகளையும்  ஆடுகளையும்  
சிற்றுயிர்களையும்  பேணும் தமிழர் மரபே  மாட்டுப் பொங்கல்!

வயலில் களையெடுப்பதிலும்  மனத்தில்  களையெடுப்பதிலும்  தாய்மையும் தூய்மையும் கொண்ட பெண்களையும்
பெரியோர்களையும்  குழந்தைகளையும்  போற்றும் நாளே  காணும் பொங்கல்!




தமிழ்ப் புத்தாண்டு பொங்குக!        -செந்தமிழன்சீமான்

அநீதி இழைப்பார்க்கு  எதிராக-

அடக்கு முறைக்கு எதிராக-
அடிமைத் தனத்திற்கு எதிராக-
தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக-
பொங்குங்கள்  தமிழர்களே! -
பொங்குங்கள்!

ஊழல் புரிவோர்க்கு எதிராக-
வதைக்கும் கையூட்டிற்கு எதிராக-
பாலியல் வன்முறைக்கு எதிராக-
பண்பாட்டு சீரழிவிற்கு எதிராக-
பொங்குங்கள்  தமிழர்களே! -
பொங்குங்கள்!

இன அழிப்பிற்கு எதிராக-
அணு உலைக்கு  எதிராக-
முல்லை அணை எதிர்ப்புக்கு எதிராக-
மீனவரைத் தாக்குவதற்கு எதிராக-
பொங்குங்கள்  தமிழர்களே! -
பொங்குங்கள்!

மகளிர் உழவர் உழைப்பாளர்
மாணவர் இளைஞர் ஆன்றோர் பொங்க
தை முதல் நாள்  தமிழர் திருநாள்!
உலகத் தமிழர் இல்லங்களிலும்
இனியதமிழ் உள்ளங்களிலும்
பொங்கட்டும்  புரட்சிப் பொங்கல்!
___________________________________________________________________________________________________________

முல்லைப் பெரியாறு

மென்மையான தமிழ் மொழியை மெல்லின மூக்கொலிகள் அதிகம் சேர்த்துமேலும் மென்மையாகப் பேசும் அழகிய தமிழ்மகளே மலையாளம்; சமற்கிருதச் சேர்க்கையால் திரிந்து கேரளம் ஆகியது. நல்ல நீர்வளமும் அழகிய சோலைகளும் ஆறுகளும் மலைகளும் நிரம்பிய அப்பகுதி ஆரியத்துக்கும் மனுவியத்துக்கும் இடம்கொடுத்து இன்று தமிழருடன் மாறுபட்டு நிற்கிறது. தமிழ் நாட்டின் எல்லைக்கு உள்ளேயே இருக்கின்ற கண்ணகி கோயிலுக்கும் புகைநீர்க்கல் (ஒகனேக்கல்) அருவிக்கும் தேக்கடிக்கும் செல்லும் தமிழர்களைக் கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் தமிழக எல்லையில் உள்ள தமிழகத்துக்காகக் கட்டப்பெற்ற முல்லைப் பெரியாற்று அணைக்கட்டிலும் தன் மீதூரலை- வன்கைப்பற்றலை- மிகுதியாக்கி வருகிறது. இதற்குக் கரணியம் தமிழர்கள் அறவுணர்வோடும்  அன்புணர்வோடும் இருப்பதோடு மெத்தனமாக இருப்பதும் பொது இலக்குகளில் ஒன்றுபடாமல் இருப்பதுமாகும். ஆயினும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிலும் முல்லைப் பெரியாற்றுஅணைப் பாதுகாப்பிலும் தமிழக மக்கள் குறிப்பாக அப்பகுதி மக்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு  வெகு நாட்களாகப் போராடியும்   வருகின்றனர். சாதி மதம் கட்சி என்று பலவகைகளில் பிளவு படுத்தும் முயற்சிகள் நடந்தாலும், நடுவண் அரசும் கேரள அரசும் பலவகைகளில் மிரட்டி வந்தாலும் மக்கள் திரண்டுள்ளனர்.
சீமான் அவர்கள் கும்பகோணத்தில் கூறுகையில், “ இராசபக்சேயின் மேல் போர்க்குற்ற உசாவல் நடத்தவேண்டும் என்று நாம் போராடியபோது, மூவர் தூக்குத் தண்டனையைக் கொண்டு வந்தனர்; அதற்குப் போராடத் தொடங்கியதும் அணு உலை, அதற்குப் போராடத்தொடங்கியதும் முல்லைப் பெரியாறு என்று திசை திருப்பி வருகின்றனர்என்று கூறியது மாபெரும் உண்மை. முல்லைப் பெரியாறு அணைக்குப் போராடும் தேனி கம்பம் பகுதி  மக்களைத் திசை திருப்ப நியூட்ரினோஆலையைத் தொடங்குவேன் என்கிறது நடுவண் அரசு; அல்லது சந்தடிசாக்கில் கொண்டு வர நினைக்கிறது. அதற்காகத்தான் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கு  இத்திட்டத்திற்கு நடுவண் அரசுடன் சேர்ந்து  நிதிஉதவி செய்யும் கணிதமேதை இராமானுசம் கல்வி நிலையத்தின் விழாவுக்காகச் சென்னை வந்துள்ளார்.
இராமநாத சேதுபதி மன்னரின் கச்சத் தீவை சிங்களர்க்குத் தாரை வார்த்ததைப் போல, சேதுபதி மன்னரின் ஆளுகையில் இருந்த முல்லையாற்றைக் கேரளர்க்குத் தாரைவார்க்க முயல்கின்றனர்! சேதுபதி மன்னரின் அமைச்சர் முத்திருளாண்டிப்பிள்ளை 1789-இல் முல்லைப் பெரியாற்றை வைகையுடன் இணைக்கும் திட்டத்தை தீட்டி, பெருஞ்செலவு என்பதால் அது செயற்படுத்த முடியாமற் போயிற்று; அதேபோல் ஆங்கிலேய அரசாலும் அதிகம் செலவுசெய்ய இயலாதபோது, அணையைக் கட்டிக்கொண்டிருந்த பென்னிகுயிக்தம் சொத்துகளையும் விற்று 1886-இல்  8000 குறுக்கம் (ஏக்கர்) நிலத்தில் 155 அடி உயரத்திற்கு அணையைக் கட்டிமுடித்தார். அப்போது திருவாங்கூர் சிற்றரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு அவ்வணை இருக்கும் இடமும் தண்ணீரும் தமிழகத்துக்கு உரிமை என்பதாகவும்,  இடத்துக்குக் குத்தகையாகத் தமிழகம் சிறு தொகை செலுத்த வேண்டும் என்றும் முடிவாகியது. ஆனால் 1970-இல் குத்தகைப்பணத்தை அதிகமாக்குவதற்காக்கூடியபோது, தமிழ் நாடும் கேரளமும் மீண்டும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில்                                   அதற்காகத்தான், அணை உடைந்து கேரள மக்களுக்கு அழிவு ஏற்படும் என்று கூறிக் கேரளர்களைத் தமிழகத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளது. அணை உடைவது போன்ற திரைப்படம் எடுத்து நடுவணரசு ஒப்புதலுடன் பரப்படுகிறது.
அணை உடையாது; ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன் கரிகாலன் கட்டிய கல்லணை  உறுதியாகத்தான் உள்ளது; வெள்ளம் வந்து  153 அடி உயரம் ஆகிய போதும், சிறு நில நடுக்கங்கள் ஏற்பட்ட போதும் அணை உடையவில்லை. அப்படியே அணை உடைந்தாலும் இடுக்கி, குலமாவு, செருதோணி அணைகளை  நோக்கியும்  தமிழகம் நோக்கியும் வெள்ளம் வரும். இடுக்கி அணை முல்லைப் பெரியாற்று அணையைவிட 7 மடங்கு பெரியது. மேலும் முல்லைப் பெரியாறு அணை 2600 அடி உயரத்தில் உள்ளது; கேரள மக்கள் வீடுகளோ 3200 அடி உயரத்தில் உள்ளன. இந்தியாவில் நூறாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய பைஞ்சுதை (சிமெண்டி) அணைகளும் 1000 ஆண்டுகட்கு முன் கட்டப்பெற்ற  பழய காரையாலும்
கல்லாலும் கட்டப்பெற்ற அணைகளும் 145 உள்ளன; இராசசுத்தான் செய்சாமந்து அணை 1730-இல் கட்டபெற்றது, இன்றுவரை நன்றாகவே உள்ளது; அவை எதுவும் இடியும் நிலையில் இல்லை.
கேரளம் 40 கோடி செலவு செய்து இடித்துவிட்டு 600 கோடி செலவில் புதிய அணையைக் கட்டியபின் தமிழகத்துக்குத் தண்ணீர் தருவோம் என்கிறது; ஆனால் இப்போதுள்ள இடத்திலிருந்து 1300 அடி தொலைவில் 50 அடி தாழ்வான இடத்தில் கட்டுவதாகக் கேரளம் திட்டம் தீட்டி உள்ளதால், தமிழகம் நோக்கித் தண்ணீர் வரவே இயலாது என்று நயன்மையர் (நீதிபதி) ஏ.கே.இராசன் தம் கட்டுரையில் எழுதியுள்ளார்.
அணையில் 152 அடி தண்ணீர் இருந்ததைக் குறைத்த்136 அடியாக்கி,மீதியை இடுக்கி அணைக்குக் கொண்டுபோய் மின்விசை ஆக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு, உச்ச நீதி மன்றம் 146 அடியாக உயர்த்தலாம் என்று 2006-இல் தீர்ப்பு கூறியும், இதுவரை தராமல் மறுத்துவருவதோடு, 120 அடியாகக் குறைக்கவும் , அணையை உடைக்கவும் சட்டம் கொண்டுவருகிறது என்றால் தமிழகத்துக்குத் தண்ணீர் தரக்கூடாது என்ற எண்ணமே!
                 தமிழகம் தன் உரிமையை இழக்கக் கூடாது. அப்படித் தமிழக உரிமையில் தலையிட்டால், எங்கள் உரிமை ஆகிய இடுக்கி மாவட்ட்த்தை நாங்கள் கேட்போம் என்று நாம்தமிழர்கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் கூறியபடி, நம் தமிழ் நிலத்தை மீட்டால் தண்ணீர் உரிமை தானாகவே நமக்கு வரும்.                                                                                                                                              
                                                                                              - இறையரசன்                      


ஒருங்கு குறியில்
பிராமிக்குத் தனியிடமா?

ஐயத்திற்கு இடமின்றி சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே எனப் பலவாற்றானும் உறுதி செய்யப்பட பின்னரும், மாலைக்கண் நோய்பிடித்த கூட்டமொன்று தமிழி என்றழைப்பதற்கு மாறாகப் பிராமி என்றுரைக்கும்  அறியாமை கண்டு எனது கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன்.ஒருங்குகுறி (யுனிகோடு) சேர்த்தியத்திடம் இவ்வாறான தவறான  தகவல்  கொண்டு சேர்க்கும் கயமை  நிறை மாந்தர் யாவர் ?

செம்மொழி மாநாட்டிலே படைக்கப்பட்ட ஆய்வுகளில் தெள்ளத்தெளிவாகச் சிந்து வெளி நாகரிகம், தமிழர் நாகரிகமே என்றும் மொழி, ஊர்ப் பெயர்கள், பண்பாட்டுக்கூறுகள் , அகழ் வாய்வில் தமிழருடையதே என அறுதியிட்டு கூறப்பட்ட பின்னரும் பிராமி எங்கிருந்து வந்தது ?
ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வுகள் கி.மு.8000 - ஆண்டுகட்கு முந்தியது என்றும் நிறுவப்பட்ட பின்னரும், பிராமி எங்கிருந்து வந்தது ?

இன்றுவரை  நாளிதழ்களைப் புரட்டினால் , தொடர்ந்த அகழாய்வுகளில், பொருந்தல், காஞ்சிக்கருகே பாலாற்றங்கரை போன்ற பல இடங்களில்   பழந்தமிழர் தொடர்பான  100,000 ஆண்டுகள் பழமையான கற்காலக் கருவிகள்   போன்ற அசைக்க முடியாத தரவுகள் கிடைத்துக் கொண்டே இருக்கும் வேளையில் பிராமி எங்கிருந்து வந்தது ?

உலக அறிவியல் அறிஞர்களின் மரபணு ஆய்வின் வழியே உசிலம்பட்டி விருமாண்டியின் மரபணு 50000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வாழ்ந்துகொண்டுள்ள மாந்த இனமே நம்மினம் என முடிவு கண்ட பின்னும் பிராமி எங்கிருந்து வந்தது ?

ஆரியர் , திராவிடர் பிரிவினை கிடையாது என்று சொல்லிக் கொண்டே தமிழ் மொழி, இனம், பண்பாட்டின்  எதிரிகளின் செயல்களே  வட பிராமி தென் பிராமி போன்ற கட்டுக் கதைகள் !தமிழின எதிரிகள் நமக்குள்ளே !

 ஒரிசா பாலு எனும் ஆய்வாளர் 2011 சனவரித் .திங்கள் 17- ஆம் நாள் ஆசிய ஆய்வியல் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் தன் கடல்சார் ஆய்வின் பலனாக கிடைத்த முடிவுகளை கணினித் துணையுடன் படவிளக்கம் கொண்டு தெளிவாக  விளக்கினார்.
கண்டம் விட்டுக் கண்டம் செல்லும்`கடல் ஆமைகளின் கடற்பயண வழிகள் துணை கொண்டு - கடல் வழி, கடல் பற்றிய அறிவு, உலகம் முழுவதும் பரவிய தமிழர் என தன் ஆய்வின் முடிவுகளை அறிவித்தமர்ந்தார் .

நுனி நாக்கு ஆங்கிலத்தில், கொரியாவிலிருந்து வந்த அறிஞர் நா. கண்ணன் என்பவர்  ஒரிசா பாலுவைப் பாராட்டி, உழைப்பைப் பாராட்டி அவரது ஆய்வு நமது வேதகால அறிவைக் காட்டுகிறது என்றார்! அங்கு கூடியிருந்த தமிழறிஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரந்தக் கமுக்கத் திணிப்புக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு !

                                                                                                                                  -வரலாற்றறிஞர் கோ.கண்ணன்


தஞ்சையில்  முப்பெரும் விழா
திருவள்ளுவர் ஆண்டு 2042 நளி (கார்த்திகை) 19 (05.12.2011) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஆபிரகாம் பண்டிதர் வீட்டருகில் உள்ள “இலாலி திருமண மண்டபத்தில் எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளையின் முப்பெரு விழா தஞ்சை சந்திரசேகரன் கரகாட்டக் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
 நிறுவனர்,சிங்கப்பூர் ஃபூச்சுன் பள்ளித் தமிழாசிரியர், சகாயராசு (எ) இளங்குமரன் அவர்களின் தங்கை  தா.சந்தனமேரி,  அ.சோசப் ராசு ஆகியோருக்குக் காலையில் நடைபெற்ற திருமணத்திற்கான  வரவேற்பு விழாவும் எழுத்தேணி இல்லம்திறப்பு வாழ்த்துரை விழாவும் எழுத்தேணி பதிப்பகத்தின் சவேரியார்நூல் வெளியீட்டு விழாவும்  என முப்பெரும் விழாவாக, எழுத்தேணி கல்வி தொண்டு அறக்கட்டளையின் செயலர்,    முனைவர் பா.இறை யரசன் தலைமையில் நடைபெற்றன.
 சென்னை வருமானவரி ஆணையாளர், திரு சீதா. செந்தாமரைக்கண்ணன், இ.வ.பஅவர்கள்,
 “விடிவெள்ளியின் வருகைஎன்ற நூலை வெளியிட்டு வாழ்த்துரைத்தார் நூலைப்பெற்றுக் கொண்டு சென்னை, கல்லூரிக் கல்வி உதவி இயக்குநர், திரு அ.மதிவாணன் வாழ்த்துரைத்தார்.

வரலாற்ற்றிஞர் கோ.கண்ணன், திருச்சிராப்பள்ளிபாரதிதாசன் பல்கலைக்  கழகத் தமிழ்த்துறைத் தலைவர்  முனைவர் பா.மதிவாணன்,  புலவர் நாகேந்திரன், கவிஞர், தனித் தமிழ் வேங்கை மறத் தமிழ் வேந்தன் முதலியோர் வாழ்த்துரைத்தனர்நூலாசிரியர் மும்பை சரவணன் ஏற்புரை கூறினார்.
 விழா வில் எழுத்தேணி அறக்கட்டளை உறுப்பினர்களும்  தமிழாசிரியர்களும் தமிழன்பர்களும் குடும்பத்தினரும்
திரளாகப் பங்கேற்றனர். எழுத்தேணி அறக்கட்டளை நிறுவனர் தா. இளங்குமரன் (சகாயராசு  )நன்றி கூறினார்
--------------------------------------------------------------------------------------      
         ஒருங்குகுறியில்கிரந்தத் திணிப்பு கூடாது!


அமெரிக்காவில் வட கரோலினா மாநிலத்தில்  உள்ள  கரோலினா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சுந்தர் 

செயபாலன் அவர்கள்  ஒருங்குகுறி சேர்த்தியத்தில் உறுப்பினராகிக்காஞ்சி மடத்தின் இரமண சர்மா 

தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துகள் சேர்க்க வேண்டும் என்று கொடுத்த முன்மொழிவை 

எதிர்த்துத் தம் கருத்துரையைத் தக்க ஆவணங்களுடன்  பதிவுசெய்தார். இப்போது மீண்டும் அதே 

சிக்கலை நடுவண் அரசு எழுப்பியுள்ளதால், தமிழில் கிரந்தத் திணிப்பு கூடாது என்று தமிழக அரசின் 

தமிழ் வளர்ச்சித்துறை  முலமாகத் தமிழ் அமைப்புகள் தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுகிறோம்

ஒருங்குகுறி சேர்த்தியத்திற்கு அதன் உறுப்பினராக உள்ள நண்பர் திரு சுந்தர் செயபாலன் தம் 

எதிப்பைப் பதியவுள்ளார். அவர் வழியாகவும் நம் கருத்துகள் சேர்க்கப்பெறும்.

---------------------------------------------

வரலாற்றறிஞர் கண்ணன் சப்பான் நாட்டில்! அவருக்கு அமெரிக்கத் தலைவர் ஒபாமா இலங்கை 

பற்றி மடல்!


வரலாற்ற்றிஞர் கோ.கண்ணன், இப்போது சப்பான் பயணத்தில் உள்ளார். அவர் சென்ற மாதம் அமெரிக்க 

மக்களாட்சித் தலைவர் ஒபாமா அவர்களுக்கு சிங்களப் புத்தமத இனவாத அரசு செய்த தமிழ்இனஅழிப்புப் 

போரில் நடந்த மனித 

உரிமை மீறல்களையும் வன்கொடுமைகளையும் விளக்கி நீண்ட மடல் எழுதினார். அதற்கு அமெரிக்க 

மக்களாட்சித் தலைவரிடமிருந்து உடனடியாகக்

கவனிக்கப் பெறும் என்றும் ஆவன செய்யப்பெறும் என்றும் மறுதொடர்புகொண்டு மீளத் 

தெரிவிப்பதாகவும் மடல்  வந்துள்ளது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பொங்குக தமிழ்ப் பொங்கல்!                                   

விண்மீதே கதிரவனின் வீச்சு; செந்நெல்

     விளைநிலம்தான் உழவர்தம் மூச்சு; வீர

மண்மீதே ஏறுவிளையாட்டு; வெற்றி

     மறவர்க்கே புகழ்மாலை சூட்டு; காதல்

கண்மீதே இரக்கமதைத் தேக்கு; ஏழைக்

     கலக்கத்தைப் போர்செய்தே போக்கு;ஈன்ற

பெண்மீதே பழியுரைத்த அடிமைக் காலம்

     பெயர்ந்ததென நீயெடுப்பாய்த் தீயின் கோலம்!


சேற்றுக்குள் பாடுபடும் மக்கள்; வாழ்க்கை

      சிறக்காமல் ஏனின்னும் சிக்கல்; ஆழ

ஊற்றுக்குள் கசிகின்ற தண்ணீர்;  அந்த

      உழவர்தம் விழியூற்றின் கண்ணீர்;  ஓடும்

ஆற்றுக்குள் அணைகட்டி வைப்பார்; சிந்தும்

      அமுதமழைத் தேன்துளியைச் சேர்ப்பார்; தென்றல்

காற்றுக்குள் நடனமிடும் பயிர்க்க ளிப்பார்;

     கயவர்கள் அவருழைப்பால் தான்செ ழிப்பார்!


நடிக்கின்ற நடுவணர சாட்சி; செய்யும்

      நரிக்குணத்தால் அதற்கில்லை மாட்சி; மேழி

பிடிக்கின்ற ஏராளர் வீட்டில்; பஞ்சம்          பிழைத்திருந்தால் ஏதுயர்வு நாட்டில்
எங்கும்

அடிக்கின்ற கடன்கொள்ளை வட்டம்; காண்பீர்!

      அனைத்துல வைப்பென்னும் திட்டம்; உண்மை

வெடிக்கின்ற புரட்சிக்கே உரத்தை ஊட்டும்

       விடியலுக்கே நாம்தமிழர் அணியைக் கூட்டும்!



வேர்வைக்குள் கதிர்விளைக்கும் பேர்கள்; மக்கள்

       விடுதலைக்கே முதலாணி வேர்கள்; சட்டப்

போர்வைக்குள் வரிபோடும் கூட்டம்; இன்னும்     போடுவதேன் பெரும்பித்த 
லாட்டம்; புல்லர்

தீர்வைக்குள் விளைபொருளின் ஏற்றம்; என்றும்

      திண்டாடும் உழவர்க்கே மாற்றம்; சீமான்

பார்வைக்குள் நாம்தமிழர் படைகள் பொங்க,

       பயனுழவர் படைதிரள்க! யாவும் வெல்க!



                         

                - தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன்



* * * * * * * *

பொங்கல் விழா
திருவள்ளுவர்  புத்தாண்டுப் பிறப்பு   தை முதல்நாளில் தமிழர்களே!
உறுதி ஏற்போம்!
 1.குழந்தைகளுக்கும், இல்லங்களுக்கும் வணிக  நிறுவனங்களுக்கும் நல்ல தமிழில் பெயர் சூட்டுவோம்!
 2. கல்வி மொழி, ஆட்சி மொழி, சமயமொழி தமிழாக்குவோம்!

கரும்புத் தோட்டத்திலே ****
3. மாதம் ஒரு தமிழ் நூலாவது வாங்குவோம்!

 4. மாதம் ஒரு இலக்கியக் கூட்டமாவது குடும்பத்துடன் செல்வோம்!

 5. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, முதன்மொழி, புலமை, வெல்லும் தூயதமிழ் ….. முதலிய தனித்தமிழ் இலக்கிய இதழ்களை வாங்குவோம்!

 6. நீங்கள் வாழும் இடத்தில், தெருவில், ஊரில், பகுதியில் நடைபெறும் மக்கள் மன்றத்தில் / கூட்டங்களில் பங்கேற்று குமுகாயச் சிக்கல்களில் தீர்வு காணப் பாடுபடுங்கள்

7 மொழி, இனம், வாழ்வியல் தொடர்பாகஉங்கள் கண்ணில் கருத்தில் தெரியும் குறைகள் பற்றி மக்கள் மன்றங்களுக்கு, இதழ்களுக்கு ஊடகங்களுக்கு அதிகாரிகளுக்கு எழுதுங்கள்
-       இறையரசன்

                                                               *************************** 

                                 செம்மொழியும் சிவந்த ஈழமும்”  -  நூலுக்கான மதிப்புரை

தமிழ் உயர் தனிச் செம்மொழி என்று 1856-இல் கால்டுவெல் உலகிற்கு  உணர்த்தினார். நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த என் பாட்டன் மன்னன் சேதுபதி காலத்திலிருந்து போராடிச் செம்மொழி என்ற அறிவிப்பை இந்திய அரசு இப்போதுதான் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் உள்ள குறைகளையும்இந்திய அரசு வாழ்விழந்த வடமொழிக்கும் நேற்று முளைத்த இந்திக்கும் கோடிகோடியாகக் கொட்டி மகிழுகிற நிலையில்தமிழுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக எழுதியுள்ளார் தஞ்சை இறையரசனார்.
                                                                                                     -----------------------  செந்தமிழன் சீமான்   
                                                       03-01-2012
                                                                   அணிந்துரை
ஈழத்திலே நூறாயிரக் கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதைக்கூட அறியாத உணராத தமிழ்மக்களே அதிகம். ஆனால் தமிழன் என்ற எண்ணத்தைவிட சாதீய உணர்வுகளே மேலோங்கியுள்ளன. சாதியின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கும் நிலையே அதிகமாக உள்ளது! அதனைவிடுத்து தமிழ் இனம் என்று இன அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். தமிழ்மொழியையும் தமிழினத்தையும் காப்பாற்றப் போராடும் அவர் முயற்சியே இந்நூல்!                                                                                                                                                                                   தா.இளங்குமரன்,     
                                                                                                                                                  தமிழாசிரியர், பூச்சூன் பள்ளி, சிங்கப்பூர்.
                                                                                                                                              01-01-2012.

பாலியல்+வன்முறை = திரைப்படம்” -
நூலுக்கான  மதிப்புரை
கலை வடிவத்தின் இன்றைய வளர்ச்சியான திரைப்படம், தொலைக்காட்சிஇணைய தளம் முதலிய ஊடகங்கள் நன்றாகச் செயல்பட வேண்டும் என்பதே நண்பர் இறையரசனின் விருப்பம் ஆகும். அவர் மனக்குமுறலைக் கலைத்துறையினர் அனைவரும் உணர்ந்தால் எதிர்காலச் சமுதாயம் சிறக்கும்.
நடிகர் இராஜேஷ்
02-01-2012
ணிந்துரை
ஒருங்குகுறியில் (யுனிகோடில்) கிரந்த எழுத்துத் திணிப்பாகட்டும், ஈழத்தமிழ் மக்கள் இன்னல் ஆகட்டும் எங்கெல்லாம் தாய்த் தமிழுக்கு, தமிழ் இனத்திற்கு  இடர் என்று கேட்ட உடனேயே ஒரு போராளியைப் போன்று செயற்பட்டுத் தடுத்திட முயல்பவர்தான் இறையரசனார்அவர் மேன்மேலும் இதைப் போன்று பல நல்ல நூல்களைப் படைத்துத்  தமிழ்த்  தொண்டாற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சுந்தர.செயபாலன்,
தலைவர்,கரோலினா தமிழ்ச் சங்கம், வட அமெரிக்கா.
01-01-2012             
                                                                             

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

இன்று 30-01-2011 மாலைமுரசில் வெளிவந்துள்ள அறிக்கை:

இணையத்தில் தமிழை அழிக்க முயற்சி யூனிகோடு அமைப்பில் சேர தமிழக அரசு தமிழக அரசு தாமதம்! இணையத்தில் கிரந்த எழுத்துகளைப் புகுத்தி அழிக்கமுயற்சி நடக்கிறது. இது தொடர்பாக யூனிகோடு அமைப்பில் சேர தமிழகரசு தாமதம் செய்கிறது என்று தமிழ் எழுச்சிப்பேரவை கூறியுள்ளது. தமிழில் கலந்த அரபு உருது சமற்கிருத சொற்கள் படிப்படியே நீங்கி மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தால் செந்தமிழ் ஆகியது. ஜாஸ்தி, கச்சேரி, வக்கீல், ஜமீன், சர்க்கார், வாயிதா முதலிய அராபிய பாரசீக உருதுச் சொற்கள் நீங்கின. ஆனால் கலெக்டர், கவர்மென்ட், ஸ்கூல், எனப் பல சொற்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குள் புகுந்து இயல்பான வழக்குச் சொற்களையும் அகற்றித் தமிழைத் தமிங்கலம் ஆக்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் கிரந்த எழுத்துகளைச் சேர்த்து தமிழில் மிக அதிகமான சமற்கிருதச் சொற்கள் புகவேண்டும் என்றும் சிலர் விரும்புகின்றனர். சமற்கிருதநூல்களைக் கணினியில் கொண்டு வருவதற்காக 26 கிரந்த எழுத்துகளை தமிழ் ஒருங்குகுறி(யுனிகோடு)யில் சேர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடத்தைச் சார்ந்த இரமணசர்மா அமெரிக்காவில் உள்ள ஒருங்குகுறி சேர்த்தியத்திற்கு எழுதினார். கிரந்த எழுத்துகளில் தமிழின் சிறப்பெழுத்துகளாகிய ற, ன, ழ, எ, ஒ ஆகிய 5 எழுத்துகளை சேர்க்க வேண்டும் என்று நா.கணேசன் என்பவர் எழுதினார்.தமிழின் சிறப்பெழுத்துகளையும் சேர்த்து 89 கிரந்த எழுத்துகளை ஒருங்குகுறியில் கொண்டுவரவேண்டும் என்று இந்திய அரசு எழுதியது. கிரந்தம் புகுத்தப்படுகிறது என்று வெளியில் தெரியவே நாளாயிற்று. தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தம் புகக்கூடாது; கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்கக்கூடாது என்று தமிழ்க் காப்பு அமைப்புகள் எதிர்த்தன. தமிழ்ப்பல்கலைக் கழகத்துணைவேந்தர் ம.இராசேந்திரனும், இணையக்கல்விக்கழக இயக்குநர் நக்கீரனும் உடன் அரசு சார்பில் அறிஞர்களைக்கூட்டிக் கருத்தறிந்து அரசுக்குத்தெரிவித்தனர். கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு 06–11–2010 அன்று இந்திய அரசுக்கு எழுதியது..அதனால் கிரந்தம் பற்றி முடிவெடுப்பதை அமெரிக்க நிறுவனம் 06-02-2011 வரை நிறுத்திவைத்துள்ளது.. நாள் நெருங்கியது ஒருங்குகுறிச் சேர்த்தியத்திற்குக் கருத்து தெரிவிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது! இப்போதுதான் தமிழக அரசு கருத்தறிந்து தெரிவிக்க வல்லுநர் குழு எற்படுத்தியுள்ளது. ஆனால், 07-02-2011 நடைபெற உள்ள கூட்டத்தில் கருத்து தெரிவிக்க, ஒரு வாரம் முன்னரே எழுதியனுப்ப வேண்டும். தமிழக அரசு இதுவரை சேர்த்தியத்தில் உறுப்பினராகவில்லை. தன் கீழுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தையோ உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தையோ ஒரு சாதாரண உறுப்பினராகக் கூட சேர்க்கவில்லை. தமிழில் வழிபாடு, தமிழ்வழிக்கலவி, அனைவரும் அர்ச்சகராகலாம் முதலிய பல திட்டங்களில் குழு அமைத்ததோடு, அல்லது வழக்கு மன்றத்தில் நிறுத்தியதோடு அவற்றை நிறைவேற்றாமல் விட்டுவிட்டது தமிழக அரசு. அதேபோல் இப்போதும் தூங்கிவிடாமல் இன்னும் இரண்டு நாளில் எழுத வேண்டியிருப்பதால், உடனடியாகத் தமிழக அரசு வாக்குரிமையுடன் கூடிய உறுப்பினராக வேண்டும்; தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் முதலிய அமைப்புகளையும் உறுப்பினர்களாகச் சேர்த்துத் தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சனி, 25 டிசம்பர், 2010

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பு

ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பு - முனைவர் பா.இறையரசன் இந்து மதத்தினுடைய மொழி சமற்கிருதம் ஆகும். கி.பி.எட்டாம் நூற்றாண்டில்தான் இந்து மதம் என்று தனி நிறுவன உருவாக்கம் பெற்றது. அதற்குமுன் தாய்த்தெய்வம், சிவன், திருமால், இந்திரன், வருணன் எனப் பல கடவுளரை வணங்குவதாகத் தமிழர்களின் (இந்தியத்) தொல்மதம் இருந்தது. தமிழர் மதத்தில் ஆரியக் கலப்புற்ற நிலையில் தொல்மதத்திற்கு உள்ளேயே வேத ஆரியர் தனியே இயங்கி வந்தனர். அவர்கள் மொழி வேதமொழி எனப்பட்டது. ஆரியரின் வேள்விக் கொள்கையையும், உயிர்பலியையும் எதிர்த்து வடநாட்டில் திராவிடர்களால் (தமிழர்களால்) தோற்றுவிக்கப்பட்டவையே ஆசீவகமும் சமணமும் பெளத்தமும். அவை பாலிமொழியையும் பின்னர் அதிலிருந்து கிளைத்த பிராகிருத மொழியையும் பின்பற்றின. இவை பாகத மொழிகள் (மாகதி, அர்த்தமாகதி) எனப்பட்டன. இவற்றிலிருந்து பிற்காலத்தில் செய்யப்பட்ட மொழியே சமற்கிருதம் ஆகும். ஆரியர்களிடம் எழுத்துமொழி இல்லாததால் வாய்மொழி வழிபாடே - ஓதுவது மட்டுமே – இருந்தது சிந்துவெளி காலத்து தமிழர்களின் எழுத்துச் சான்றுகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தமிழகத்து அருகன்மேடு, கீழ்வாலை, கழுகுமலை எழுத்துகளை ஒத்துள்ளன. இப்பழைய தமிழ் எழுத்து முறை வடநாட்டில் பிராமி என்றும், தென்னாட்டில் தமிழி என்றும் குறிக்கப்படுகிறது. வடபிராமி தென்பிராமி என்றும் கூறுவர். வேதமொழியும் சமற்கிருதமொழியும் ஒன்றல்ல. கி.பி.முன்றாம் நூற்றாண்டிற்குப் பின்தான் சமற்கிருதம் எழுத்துருவம் பெற்றது. குப்தர் காலத்தில் (கி.பி.350 –க்குப் பின்) சமற்கிருதம் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இக்காலத்தில்தான் இராமாயணமும் பாரதமும் எழுத்து வடிவம் பெற்றன. இதற்கு முன்னாலேயே மதுரை தமிழ்ச் சங்கத்தில் கி.பி.50 அளவில் வாய்மொழியாக வடமொழியில் வழங்கி வந்த பாரதத்தை பெருந்தேவனார் என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வாய்மொழியாக வழங்கி வந்த வேதங்கள் எழுதப்படக் கூடாது என்பதையும் மீறி கி.பி.14 – ஆம் நூற்றாண்டில் தென்னாட்டில் சாயானாச்சாரியார் என்பவர் எழுத்து வடிவம் கொடுத்தார். (வே.தி.செல்லம்- “தமிழக வரலாறும் பண்பாடும்”-பக்கம் 69) கிரந்தம் என்பது ஒரு மொழி இல்லை. அது பேச்சு வழக்கிலும் இருந்தது இல்லை. சமற்கிருதம் எவ்வாறு ஒரு நாட்டிற்கோ இனத்திற்கோ சொந்தமில்லா மொழியோ அதைப்போன்றதுதான் கிரந்தமும் . ஆனாலும் கிரந்தம் தமிழர்கள் தோற்றுவித்ததுதான். சமற்கிருதத்தைத் தமிழில் எழுதும் போது ஆரியருடைய வகை ஒலிகளை குறிக்க 31 குறியீடுகளைத் தமிழ் எழுத்துகளோடு சேர்த்து வழங்குவதே கிரந்தம் ஆகும். தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் தவிர வகை ஒலி எழுத்து, கூட்டெழுத்து ஆகியவற்றுடன் 89 குறியீடுகள் கிரந்தத்தில் உள்ளன. கிரந்த எழுத்துமுறை கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்துதான் பல்லவர் சாதவாகனர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. தமிழ் எழுத்துகளால் தமிழர்கள் உருவாக்கிய இக்கிரந்த எழுத்துகள் சமற்கிருதத்தை எழுதப் பயன்படுத்தப்பெற்றவை; இவற்றைத் தமிழ் மொழிக்குள் புகுத்துவதை நாம் எதிர்க்கிறோம். வடமொழி ஒலிகளைக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட 31குறியீடுகளையும் தமிழில் சேர்த்தால் தமிழ்கிரந்தமாகத் திரிந்து போய்விடும். வடமொழி ஒலிகளையும் அவற்றைக் குறிக்கக் கிரந்த எழுத்துகளையும் ஏற்றதுடன் மிகுதியான வட சொற்களையும் ஏற்றதால்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியன தோன்றின; திரிந்த / திருந்தாத் திராவிட மொழிகள் தோன்றின. கிரந்தத்தில் விடுபட்டுள்ள தமிழின் சிறப்பெழுத்துகளாகிய “ ற,ன, ழ, எ. ஒ” ஆகியவற்றைச் சேர்த்துவிட்டால் மின்னஞ்சல் மின்னூல்கள், கணினிப்பயன்பாடு, நூல் அச்சிடல் , மடல்கள் ஆகியவற்றைத் தமிழர்கள் இனிமேல் கிரந்தத்தில் செய்வர் என்று நாக.கணேசன் ஒருங்குகுறி ஆணையத்துக்கு எழுதியுள்ளார். தமிழில் விடுபட்டுள்ள கிரந்தக்குறியீடுகள் 26-ஐயும் “தமிழ் விரிவு” ( Extended Tamil) எனத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்று ஒருங்குகுறி ஆணையத்துக்குத் திட்டமெழுதியுள்ள இரமண சர்மா , தேவநாகரியிலும் கிரந்தத்திலும் உள்ள இந்து சமய வழிபாட்டுப் பாடல்களையும் சடங்கு முறை நூல்களையும் தமிழுக்குள் கொண்டுவந்து விடலாம் என்கிறார். காஞ்சி சங்கராச்சாரியாரின் மடத்தைச் சார்ந்த சமற்கிருத அறிஞர்கள் தமக்கு துணை இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்களர்களால் இலங்கைத் தீவின் ஒரு மூலைக்கு விரட்டப்பட்ட ஈழத்தமிழர்களில் ஒரிலக்கம் பேருக்கு மேல் 3 நாளில் கொன்று குவிக்கப்பட்டார்களே! அதேபோல சர்மா, கணேசன் இரண்டு பேருமே ஈராயிரம் ஆண்டுகளாக படிப்படியே இந்திய தீபகற்பத்தின் தென்கோடி மூலைக்குள் விரட்டப்பட்டு சுருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ள தமிழர்களை - தமிழ் மொழியை - முழுதும் ஆரியமாக்கிவிட முயல்கின்றார்கள். “ஐந்தெழுத்தால் ஒருபாடை என அறையவும் நாணுவர் அறிவுடையோரே” என்று ஒரு தமிழனே (ஈசானதேசிகர்) தமிழைத் தாழ்த்தி எழுதியது போல, சர்மாவும் தமிழின் சிறப்பெழுத்துகள் “ற, ன, ழ, எ, ஒ” சிறப்பெழுத்துகள் ஐந்தும் கிரந்த எழுத்துகளோடு இருந்தால் அசிங்கம் (absurrd) என்று எழுதியுள்ள சர்மா அவற்றைச் சேர்க்க முயலும் கணேசனுடன் சண்டையிட்டு இப்போது வெளிப்பட்டுள்ளார். கிரந்தத்தில் தமிழின் சிறப்பெழுத்துகள் ஐந்தையும் சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு 06–11–2010 அன்று இந்திய அரசுக்கு எழுதியது. இதை தவறாகப் புரிந்து கொண்டு தினமணி 09-11-2010 அன்று ஆசிரிய உரை (தலையங்கம்) எழுதியது. ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ என்ற 5 கிரந்த எழுத்துகளைத் தமிழ் ஒருங்குகுறியில் சேர்க்கக் கூடாது என்றும் அதுவரை தமிழ் ஒருங்குகுறியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு எழுதியதாகக் குற்றம் சாட்டியது. “தமிழில் பஞ்சாங்கம், ஜோதிட நூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது, இவை கணினியில் இடம் பெறாமல் தடுப்பது முறையாகுமா?” என்று தினமணி எழுதியது. ஆனால் இந்த 5 எழுத்துகளுக்குமேல் விடுபட்டுள்ள 26 கிரந்த எழுத்துகளையும் சேர்க்க வேண்டும் என்பதுதான் சர்மாவின் கோரிக்கை. பஞ்சாங்கம், சோதிடம் ஆகியவற்றுடன் ஈட்டுரை பகவத்கீதை முதலிய வடமொழி நூல்கள் ஆகியவற்றை அச்சிட இந்த எழுத்துகள் தேவை என்று சர்மா கூறுகிறார். மறுபடியும் தமிழ் மொழியை மணிப்பவழ (பிரவாள) நடையாக மாற்ற வேண்டும் என்பது அவரது விருப்பம். வடமொழிக் கலப்பில் இருந்து தமிழை மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் மீட்டெடுத்து உள்ளது. இந்நிலையில் ஆங்கிலவழிக் கல்வியால் ஆங்கிலக் கலப்பு மொழி (தமிங்கிலம்) பெருகி வருகிறது. இத்துடன் கிரந்த வேற்றொலிகளைக் கலந்தால், மலையாளம் போல் தமிழ் கிளை மொழியாகிப் பின்னர் கலவைமொழி (கிரையோல்) ஆகிவிடும். ஏற்கனவே “கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா” சீரிளமை கொண்ட தமிழ் மொழியானது வடமொழி, ஆங்கிலக் கலப்பால் சிதைந்து வருவதை எண்ணி வருந்தியும், “தமிழினி மெல்லச் சாகும்” என்று கூறுபவர்களைப் பார்த்துப் பேதை என்று சாடியும் வருகிறோம். கிரந்த எழுத்துகள் முழுவதையும் சேர்த்து தமிழில் வடமொழிக் கலப்பை மிகுதி ஆக்கினால் மணிப்பவழம் (பிரவாளம்) இறுதியில் ‘மன்ய பிரவாளம்’ (மணிப்பவழம்) என வடமொழியும், ஆங்கிலமும் 90 விழுக்காடும், தமிழ் 10 விழுக்காடும் கலந்து பேச்சிலும் கிரந்தத் தமிழ் எழுத்திலும் வழங்கத் தொடங்கிவிடும். தமிங்கிலத்தில் (வியூயர்ஸ் கால் பண்ணுங்க, நியூசாங் வேணுமா... முதலிய பேச்சு வழக்குகளும், ciniமா, 4G செல்போன், குட்டீஸ்கள், ஐடியாக்கள்) இன்றுள்ள கலப்பு கிரந்தத் தமிழில் வரும். பிறந்த குழந்தையையும் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்துவிடுகிறோம். சிறுகுழந்தை தவறி விழுந்து அம்மா என்று அழுதபோது தமிழில் பேசாதே என்று மழலைப் பள்ளி ஆசிரியர் ஓங்கி அறைகிறார். “வீட்டில் தமிழில் பேசாதீர்கள்! நீங்கள் ஆங்கிலத்தில் பேசினால்தான் உங்கள் பிள்ளைகள் நன்றாகப் பேசும். ஆஸ்திரேலியாவில் சரியாக ஆங்கிலம் பேசாத 450 இந்தியர்களுக்கு வேலை போய்விட்டது தெரியுமா?” என்று தலைமை ஆசிரியர் கூறுகிறார். இனி வடமொழியில் பேசுங்கள் என்று கூறும் காலம் வந்துவிடும். வேலை வாய்ப்பு, வணிகமென்று ஆங்கிலம் புகுந்தது போல மதத்தை வைத்து வடமொழி புகுந்துள்ளது. பாலி, பிராகிருதம், பின்னர் சமற்கிருதம் ஆகியவை மதத்தின் மூலம் பல்லவர் ஆட்சிக் காலத்தில் செல்வாக்குப் பெற்று இலக்கியங்களிலும் சமய நூல்களிலும் ஆட்சியிலும் கல்வெட்டு செப்பேடுகளிலும் இடம் பெற்று இருந்தன. இதனை மாற்றிச் சமய எழுச்சி காலத்தில் தேவாரம் முதலியவைத் தோன்ற, அவை மறைக்கப் பட்ட போது, அவற்றை மீட்டெடுத்ததுடன் கல்வெட்டு செப்பேடுகளிலும் இலக்கியங்களிலும் தமிழை வளரச் செய்தவன் பேரரசன் இராசராசன். தூய தமிழில் அமைந்த ஆழ்வார் பாடல்களுக்கும் ஈட்டுரை என வடமொழியை மிகுதியாகக் கலந்து மணிப்பவழ நடையை திணித்தனர். அது தோல்வியுற்றது. இப்போது ஆங்கிலச் சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் கலந்து எழுதவேண்டும் என்போர் புறப்பட்டு உள்ளனர். தமிழ் எழுத்துகள் அங்கு சென்றால், தமிழுக்கு எழுத்து முறையே கிடையாது, வடபிராமியில் இருந்துதான் வந்தது என்று கூறிவிடுவார்கள். தமிழுக்கு முகமே கிடையாது என்று எழுதியவர்கள் அல்லவா! அதேபோல் தமிழில் கிரந்த எழுத்துகளும் அவற்றின் ஒலிகளும் சேர்ந்தால், தமிழ்மொழி விரைவில் தமிங்கிலமும் சமற்கிருதமும் கலந்த கிரந்தமொழி ஆகிவிடும். பாவாணர் சொல்வதுபோல் இரட்டைமடி மணிப்பிரவாளம் ஆகிவிடும். எனவே, நாம் தமிழில் கிரந்த எழுத்துகள் தமிழில் சேர்வதையும் எதிர்க்கிறோம் தமிழின் 5 சிறப்பெழுத்துகள் கிரந்தத்திற்குச் செல்வதையும் எதிர்க்கிறோம். நன்றி: தென்மொழி [தி.பி.2041,சிலை (திசம்பர்,2010) திங்களிதழில் வெளிவந்த கட்டுரை.]

வெள்ளி, 17 டிசம்பர், 2010

சங்க இலக்கியங்கள் தேவையில்லையா?

சங்க இலக்கியங்களில் பல பாடல்கள் சுவையற்றன என்றும் மிகச்சில மட்டுமே கவிதைத்தன்மை கொண்டவை என்றும் திறனாய்வாளர்கள் சிலர் பேசிவருகின்றனர். அரசர்களைப் புகழும் அவை , மக்களைப் பாடாததால் இன்றைய மக்களுக்குப் பயனில்லை என்றும் ஆற்றுப்படை நூல்கள், சேர அரசர்களைப் பாடும் பதிற்றுப்பத்து முதலியன அறவே தேவையற்றன என்று ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர். அண்மையில் கல்லூரி ஒன்றில் நடந்த கருத்தரங்கில் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற ஒருபெண்மணி, சங்கக்காலத்தில் நில உடைமை முதலாளித்துவத்தை வளர்த்துவிட்ட அரசர்களையும் பணக்காரர்களையும் பொய்யுரைகளால் புகழ்ந்து பாடித் தம் வயிற்றை நிரப்பிய வறிய புலவர்கள் பாடிய பாடல்களே சங்க இலக்கியங்கள்; இவை சமுதாயச் சிந்தனை அற்றவை என்று புரட்சிமுழக்கம் செய்தார். கவிதைத் தன்மை, மார்க்கசியம், வர்க்கம், முற்போக்கு என்றெல்லாம் இவர்கள் கூறுவன வெற்றுச் சொற்கள். திறனாய்வியல் கொள்கைகளையும் பெரியாரியம், மார்க்கசியம் , காந்தியம் போன்ற கோட்பாடுகளையும் படிக்காமல் தங்களை மிகப் பெரிய முற்போக்குச் சிந்தனையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காகப் பல தளங்களில் சிதைக்கும் தாக்குதல் பேச்சுக்களைப் பேசியும் எழுதியும் வருகின்றனர். தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் மிகத் தொன்மையான சங்க இலக்கியங்களில் புறநானூற்றுப் பாடலை வெற்றுச் செய்யுள் என்று கூறுவதும், கவிதை அல்லாததால் இலக்கியத்துக்குச் சுமை என்றும் மாணவர்க்குப் பாரம் என்று கூறுவதும் தாயையும் தந்தையையும் பாரம் என்று கூறி முதியோர் இல்லத்துக்கு விரட்டும் தன்மையாகும். “இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழ்நிலையில் இத்தகைய செய்யுள்களின் தேவை என்ன ?” - என்கின்றனர் இப்புதிய திறனாய்வாளர்கள். புராண, வரலாற்றுப் பாத்திரங்களின் உணர்வுகளையும் வாழ்க்கை நடைமுறைகளையும் அக்கால அரசர்களின் செயல்களையும் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் முன்னைய வாழ்க்கை முறைகளையும் பாடும் இலக்கியங்களைச் சுமை என்று எந்த நாட்டு மக்களும் ஒதுக்கி விடவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்க்கைமுறை என்பதால் கிரேக்கக் காப்பியங்களை யாரும் சுமை என்று கூறவில்லை. வேல் எடுத்துப் போர் புரிவதைக் கூறும் இப்பாடல் சுமை என்றால், வில் எடுத்துப் போர்புரியும் கதைகூறும் கம்பராமாயணம் சுமையாகுமா? இராண்டாயிம் ஆண்டுகள் முன் பாடியதால் அச்சமுதாய முறை மாறிவிட்டது என்றால், இருநூறு ஆண்டுகள்முன், ஏன், இருபது ஆண்டுகள் முன் பாடியனவும் சமுதாய முறை மாறிவிட்டதால் பயனற்றுப் போய்விடுமே! இந்திய விடுதலைக்காகப் பாடிய பாரதியின் ‘தேசியப் பாடல்கள் போய்விடும்; பக்திப் பாடல்கள்தான் நிலைக்கும்’ என்று சிலர் கூறினர். தேசியப் பாடல்கள் இன்று ஒதுக்கப்பட்டு விட்டனவா? பிசித் தீவில் இந்தியப் பெண்களின் கண்ணீர் பற்றிப் பாரதி பாடிய பாடலுக்கு இன்றும் நாம் கண் கலங்குகிறோம். மொழி, இனம், மதம், காலம், வாழ்வியல்முறை – எல்லாம் மீறி உருவாகுவதே இலக்கியம். டென்னிசன் என்றோ எங்கோ அறுவடை செய்யும் தம் நாட்டுப் பெண்ணைப் பற்றி பாடியது, நம் நாட்டுப்புறப் பெண்களை நினைவூட்டுகிறது. அயல்நாட்டு இலக்கியங்களில் இருநூறு ஆண்டுகட்கு முற்பட்ட வாழ்க்கை முறை அவர்களுக்கே கூட மாறிப்போய்விட்டது; நாமும் அப்பாடல்களில், நம் நாட்டு இன்றைய கால வாழ்க்கை முறையோ, அரிசிச்சோறு உணவு முறையோ, சேலை வேட்டி உடைமுறையோ இல்லாததற்காக அவை கவிதை இல்லை என்று ஒதுக்குவதில்லை; தலைக் கவசமும் (ஹெல்மட்) குதிரைப் போரும் பற்றி அவை பாடுவதால் இலக்கியம் இல்லை என்று கருதுவதில்லை. புறநானூற்றில் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனும் பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் சோழன் நலங்கிள்ளியும் பாடியுள்ள வஞ்சினக் காஞ்சிப் பாடல்களும், சூலியசு சீசர் என்னும் ஆங்கில நாடகத்தில் அந்தோனியின் வீரவுரையும், மனோன்மணியம் நாடகத்தில் சீவகனுடைய வீரவுரையும் படிக்கும்போது அவற்றின் இலக்கியத் தன்மையை காலம், இனம், மொழி கடந்து போற்றுகிறோம். அக்காலப் போர்முறை இன்று இல்லை என்பதால் இவை கவிதை இல்லை என்று நாம் ஒதுக்குகிறோமா?
வாழ்வியல் கூறும் “ஈன்று புறந்தருதல்...” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலைச் செய்யுள் என்றும் சுமை என்றும் ஒதுக்க முடியுமா? சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் செய்ய வேண்டிய கடமைகளை உணர்த்தி, மறக்குலத்தாய் ஒருத்தி பாடிய இப்பாடல் எக்காலத்துக்கும் உரிய இலக்கியத் தன்மை கொண்டது. ஒரு தாய்க்கு எந்த அளவுக்குக் குடும்பப் பொறுப்பும் நாட்டுப் பொறுப்பும் அன்று இருந்தன என்பதையும் இன்றும் இருக்க வேண்டும் என்பதையும் இப்புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. அரசன், கொல்லன், வேல் முதலியன இன்று – அரசு, தொழிற்சாலை, கருவி முதலியவற்றைக் குறித்து, நமக்குக் கடமை உணர்வைத் தருவனவே. எனவே இப்பாடல் கவிதை ஆகாதா? சுமையா? கவிதை என்பது வரலாற்றுத் தகவலையோ சமுதாய அறத்தையோ தரக் கூடாதா? “இளையோர் சூடார்....” என்ற புறநானூற்றுப் பாடலில்” சாத்தன் ஆகிய தலைவன் இறந்தபின், முல்லை மலரே, நீ ஏன் பூத்துள்ளாய்?” என்ற கருத்து சோக அனுபவம் என்பதால் கவிதை ஆகிறது. ஆனால் நாட்டுத் தலைவனை இழந்த துயரமும் காதலியை இழந்த துன்பமும் மட்டுமே வாழ்க்கை உணர்ச்சிகளா? அவற்றைப் பாடுவன மட்டுமே கவிதையா? “பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி ஒரு மகனல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் “செல்கென விடுமே” என்னும் புறநானூற்றுப் பாடலிலும், “தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை” என்னும் பாரதிதாசன் பாடலிலும் கவிதையியலை உணர இயலாதா? எல்லோருக்கும் எல்லாப் பாடல்களும் சுவைக்கும் என்று சொல்ல முடியாது. அவரவர் அணுகுமுறை, கொள்கை, தரம், தேவை, விருப்பம் முதலியன வேறுபடுகின்றன. ஆயின் இலக்கியத் திறனாய்வாளன் சார்பு இல்லாமல் விழிகாட்ட வேண்டும். புதுமைப்பித்தன், நகுலன், வாசுகி, குட்டிரேவதி முதலியவர்கள்தான் சிறந்த கவிஞர்கள் என்கின்றனர். இவர்கள் எதைக் கவிதை என்று ஏற்கிறார்கள் என்று உணரலாம். பாரதி, பாரதிதாசன் ஆகியோரையும் அவர்களுக்கு முந்தையவர்களையும் மூட்டைகட்டி எறிந்து விடலாமா? இக்காலக் கவிஞர்களிலும் சுரதா, தமிழன்பன், வைரமுத்து, மேத்தா, அப்துல்ரகுமான், இன்குலாப், மீரா, சிற்பி, புலமைப்பித்தன், நா.காமராசன், பொன்னடியான், தமிழ்நாடன் ஆகியோர் கவிஞர்கள் இல்லையா? இவர்கள் சிறந்த கவிதை என்று காட்டும் புதுக்கவிதையாகிய உரைவீச்சுகள் புறநானூற்றுப் பாடல்களின் முன், இன்னும் சொன்னால், புறநானூற்றின் இறுதிப் பகுதியில் வரும் வரி சிதைந்த பாடல்கள் ஏதேனும் ஒன்றின்முன்கூட, நிற்கத் தகுதி அற்றவை. இக்காலப் புதுக்கவிதை என்னும் உரைப் பாக்களில் பல நல்ல கருத்துகளும் சில நல்ல உருவகங்களும் கொண்ட சில தேறுகின்றன. அதற்காக அவை மட்டுமே கவிதைகள், சங்க இலக்கியங்கள் இல்லை என்று தமிழ் மக்களுக்குத் தவறான வழிகாட்ட வேண்டிதில்லை. வெற்றுச் சொல்லடுக்குகளும், எல்லையற்ற பிறமொழிச் சொற்களும், தெளிவில்லாத படிமங்களும், இருண்மையும், தத்துவம் போன்ற பிதற்றல்களும் இன்று புதுக்கவிதை என்று பெருகிவரும்போது, அவற்றை இனங்காட்டவோ திறனாயவோ திருத்தவோ முற்படாமல், இரண்டாயிரம் ஆண்டுகளாக காலத்தை, கரையானை, எதிரிகளை வென்று நின்று வாழும் சங்கத்தமிழ் இலக்கியங்களைக் குறைசொல்ல வேண்டாம். - முனைவர் பா.இறையரசன் காற்றுவெளி திசம்பர் 2010 இதழில் வெளிவந்தது: http://kaatruveli-ithazh.blogspot.com/ *****************************************************

புதன், 10 நவம்பர், 2010

கோண்டிமொழியும் மாவோயியமும்

நட்பு இணைய இதழில் வந்த திரு குணசேகரனின் கட்டுரையிலிருந்து : மாவோயிஸ்டுகளை பொறுத்தளவில் தவறானவர்களாகத் தெரியவில்லை. தவறான பாதையில் செல்பவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஆளும், ஆளவரும், ஆளத்துடிக்கும் நம்மூர் அரசியல் இயக்கங்களை விட அவர்கள் தெளிவாகவே உள்ளனர். அவர்கள் பொய்யான வாக்குறுதி எதையும் அளிப்பதில்லை. ஊழலில் திளைப்பதில்லை. ஏறெடுத்துப் பார்க்காத அரசு எந்திரங்களின் போக்கிலிருந்து மக்களைப் பார்ப்பதில் மாறுபட்டு நிற்பவர்கள். இன்னும் நிறைய கூறலாம். எனினும் சமீபத்தில் வெளியான ஒரு செய்தியே அவர்களின் சமூகப் பொறுப்பை மத்திய அரசே வெட்கப்படும்படி அமைந்துள்ளதை அறிந்தபோது, அணி சேராத இதழாளன் எனக்கு அவர்கள் மீது இன்னும் கூடுதலான மரியாதையை உருவாக்கியுள்ளது. ஆயுதந் தாங்கி போராடும் அவர்களின் வழிமுறைகளையும் தாண்டி சமூக பொறுப்புணர்வு மெச்சத்தக்கன. மாவோயிஸ்டுகள் கருவி தாங்கி அரசின் துணை இராணுவப் படைகளை அடிக்கடி எதிர்கொள்வது ஒருபுறம் நடந்தாலும், உள்துறை அமைச்சரே சுட்டிக்காட்டி பேசும் வகையில் அவர்கள் அரசுக் கட்டித் தந்த பள்ளிகளை இடிப்பது தொடர்பாக ஒரு தகவல் உண்டு. அவர்கள் பள்ளிக் கட்டிடங்களை தகர்ப்பது உண்மை. ஏனெனில், பயன்படாத ஒன்றைத் தாங்கள் தகர்ப்பதாகச் செய்திகள் வருவது எவ்வளவு உண்மையோ அவ்வாறுதான் அப்பள்ளிகள் பழங்குடி மக்களுக்கு பயன்படவில்லை என்பதும் உண்மை. அங்கு அரசு அமர்த்தும் ஆசிரியர்களுக்கு பழங்குடி மக்களின் மொழியில் பாடம் நடத்தத் தெரியவில்லை. அத்துடன் பள்ளிகளைக் காரணம் வைத்து வருகை தரும் அதிகாரிகளும் பழங்குடி மக்களை முகம் சுழித்து ஏளனப்படுத்துவதுபோல், பாராமுகம் காட்டுவது, அவர்களை, அவர்கள் மொழியை மதிப்பதில்லை என்பன போன்ற காரணங்களாலும், மேலும் பள்ளிக் கட்டிடத்தில் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது தங்குவதற்குப் பயன்படுத்துவதாலும்தான் அதைத் தகர்ப்பதாகக் கூறுகின்றனர். இப்படித் தகர்ப்பதால் பழங்குடி மக்களின் பிள்ளைகள் கல்வி பாழாகாதா என்ற கேள்விக்கு மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர். பழங்குடிகளின் இளம் தலைமுறையினர்க்கு சிந்திக்கும் கல்வியை வழங்குவதாக மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர். கல்வி வழங்குவதைக் கருவி தாங்கிய போருக்கிடையே உள்ள முக்கிய கடமை என்றும் கூறுகின்றனர். அதற்கேற்ப, சட்டீஸ்கர் வனப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பழங்குடி குழந்தைக்கும் கணிதம் – சமூக அறிவியல் – அரசியல் – பாடங்களை, கோண்டி மொழியில் தயாரான பள்ளிப் பாடநூல்களைத் தற்போது தருகின்றனர். கோண்டி மொழி என்பது தமிழ் மொழியின் கிளை மொழிகளில் ஒன்று என்பது இங்கு மிகமிக முக்கிய சேதியாகும். குறிப்பாக தமிழ் மொழிக் குடும்பத்தில் இருவகை பிரிவுண்டு. ஒன்று: இலக்கியம் படைக்கவும், இலக்கணமுள்ளதும், பேசவும் எழுதவுமான மேம்பட்ட மொழி. இரண்டு: வெறும் இனக் குழுக்களிடையே மட்டும் பேசவும், இலக்கியம் படைக்க திறனற்றதான மொழி. இந்த இரண்டு வகை மொழிக்கூட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளுக்கு தனித்தனியே வரிவடிவம் அதாவது எழுத்துருக்கள் உண்டு. இலக்கணமும் உண்டு. இலக்கியங்களும் உண்டு. ஆனால் ஏனைய தமிழின் கிளை மொழிகளான தோடா, கோத்தர், படுகு, கேடகு, வர, கொலமி, நயினி, பருஹுய், பர்கி, ஒல்லரி, குய்ய, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, குருக், மோஸ்ரா போன்றவற்றிற்கு பேச்சு வழக்கு உண்டே தவிர, இலக்கியப் படைப்பு இல்லை. எல்லாவற்றிலும் வாய்மொழி வழக்காறுகள் உண்டு. இதுபோன்ற கிளை மொழிகளை அவை பேசும் நிலத்தை வைத்து மொழியியலாளர்கள் வகைப்டுத்தியுள்ளனர். ஆப்கான் எல்லையோரம் உள்ள பலுசிஸ்தானில் பேசப்படும் தமிழ்மொழிக் குடும்பத்து ப்ருஹுய் வட இந்திய தமிழ்மொழிகளில் ஒன்று. அதைப்போல், மத்திய இந்திய தமிழ்மொழிக் குடும்பத்திலுள்ளவை பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலியவை. தென்னிந்திய தமிழ் மொழிகளாக தோடா, கோத்தர், படுகு, கேடகு, வரகொலமி, நயினி, இருளிகா போன்றவை உள்ளன. அதிலும் தமிழ்மொழிக் குடும்பத்தின் தொன்மையான தாய்மொழியான தமிழ் தன் கிளை மொழிகளான, அதாவது சேய் மொழியான பழங்குடி மொழி ஒன்று இத்தனை நாட்கள் இலக்கியம் படைக்க இயலாத அதன் நிலையில் மாற்றம் கண்டதென்பது பழங்குடி மொழியின் எழுச்சியாகத்தான் கருத வேண்டும். இதனால் தமிழரும் பெருமை கொள்வர். தமிழ்மொழி இயல் அறிஞர்கள் உட்பட, ஆய்வாளர்கள் அனைவரும் பேருவகைக் கொள்ளத்தக்க செயல் இது. தற்போது புத்துயிர் பெற்றுள்ள தமிழ்க் கிளைமொழியாம் கோண்டியில் அடிப்படைக் கல்வி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பழங்குடி குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொழியை அறியவும் அதனைப் பயன்படுத்தி சிந்திக்கவும் ஏராளமான கதை, வரலாறு, கலை, பண்பாடு, உயிரியல் போன்ற முக்கியப் பிரிவுகளில் நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்போதுள்ள எண்மின் அசைவுபடகுலுவூட்டி குறும்படங்கள் எனவும் காட்சிப் படங்களைத் தயாரித்துள்ளனராம். ஒன்று முதல் ஐந்து வரை கோண்டி மொழி கற்பித்தல் மொழி. சட்டீஸ்கரி, கோர்கு, ஹலபி, துர்குகா போன்ற இதர மத்திய இந்திய சிறுபான்மை பழங்குடி மொழி பேசும் குழந்தைகள் உட்பட தொடக்கக்கல்வி மொழியான கோண்டியில்தான் படிக்க வேண்டும். பின்னரே உயர்நிலை அறிவியல் எதிர்காலத்தை உணர்த்தும் விதமான பாடங்களை ஆறு முதல் பத்து வரை இந்தியில் கற்கவும் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்
http://www.natpu.in/natpu/Pakudhikal/Nam%20Samookam/mavoist.php