வியாழன், 5 நவம்பர், 2009
கண்ணகி
கண்ணகி சிலை
கரடி பொம்மையா? நீல் சிலையா?
###################################################################
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
அறம், கூற்று, பத்தினி, ஊழ்வினை, உயர்ந்தோர், இவற்றில் எதையாவது கழகத்தார் நம்புகிறார்களா?
அதிலும் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பதை யார் தான்
நம்புகிறார்கள்?
கண்ணகி தமிழச்சி. கைம்பெண். சமணர். நாடு விட்டு நாடு வந்து ஒரு கலக்கு கலக்கி
விட்டிருக்கிறாள். எதற்காகக் கண்ணகிக்குச் சிலை வைத்தார்கள்?
எதற்காகக் கண்ணகியின் சிலையை இடித்தார்கள்?
வைத்தவர்களும், இடித்தவர்களும் ஒரே காரணத்துக்குக்காகத்தான் மோதிக்
கொண்டிருக்கிறார்களோ!
தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று சபித்து ஊரைக் கொளுத்தியவள் பெண்ணடிமைக்குச் சின்னமாமே! மதுரையைக் கொளுத்த அவளுக்கு என்ன உரிமை என்று கொதிக்கிறார்கள் பெண்ணுரிமைவாதிகள். அனுமனும், இராமனும், சீதையும் இவர்கள் நெற்றிக்கண்ணிலிருந்து தப்ப முடியுமா?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
###################################################################
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பேராசிரிய இறையரசன் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅகத்தியர் மடற்குழுவில் சோதனை மடல் என்ற பெயரில் யாரும் படித்திருக்கவே மாட்டார்கள் என்று எண்ணி சூலை 2006-ல் நான் கிறுக்கியதை ஆய்வுத்தமிழ் வலைப்பூவின் இரண்டாவது பதிவில் எடுத்துப் போடுவீர்கள் என்று நான் கனவிலும் எண்ணவில்லை!
அன்று நான் கிறுக்கிய மடலின் முழுவடிவத்தின் தொடுப்பு கீழே:
http://www.treasurehouseofagathiyar.net/40200/40241.htm
இந்த இழைக்குப் பொருத்தமில்லை என்றாலும், அதில் நான் திருவள்ளுவரைப் பற்றியும் உளறியிருக்கிறேன்.
>பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவன்
>சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று ஏன் சொன்னான்?
>
>தீண்டாமை பற்றி வள்ளுவன் ஏன் குறிப்பிடவில்லை?
>
>தீண்டாமை வள்ளுவன் காலத்தில் தமிழகத்தில்லை இல்லையா?
>
>தீண்டாமையை சமணர்கள் எதிர்த்தார்களா?
>
>தீண்டாமை சமணர்களின் கொள்கையா? கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை இவை தீட்டு, தீண்டாமைக்கு வழி வகுத்தனவா?
>
>தீண்டாமையைக் கண்டித்த சமணநூல்கள் - தமிழிலோ அல்லது வடமொழிகளிலோ - ஏதேனும் இருந்திருக்கின்றனவா?
>
>இருந்தால் அவை யாவை? இல்லையென்றால், ஏன்?
>
>வள்ளுவன் என்ற பெயர் இன்று தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் வள்ளுவக் குடியைச் சுட்டுவதென்றால், தன் குடியே தீண்டாமையால் வாடுவது வள்ளுவனுக்கு உருத்தவில்லையா?
>
>ஏன்? ஏன்? ஏன்? வள்ளுவன் ஏன் தீண்டாமையைக் கண்டிக்கவில்லை?
இதற்கான விடையை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
(தற்போது) சென்னை, தமிழ்நாடு
http://kural.blogspot.com