வியாழன், 8 ஏப்ரல், 2010
கரந்தைக்கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
கரிய மேனியும், நரைத்த மீசையும், சந்தனப் பொட்டும், நிமிர்ந்த தோற்றமும்
தலைப்பாகையும் துண்டும் வெள்ளை உடையும் நிமிர்ந்த நடையும் உடையவர். சங்கஇலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாக,
தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக்கூடியவர். உரைகளும் கூடஅவருக்கு மனப்பாடம். வெறும் பாடமாக, ஏட்டுச் சுரைக்காயாகக் கற்றுத்தராமல்வாழ்வியல் சிந்தனைகளுடன் நகைச்சுவை ததும்பப் பாடம் நடத்துவார். இலக்கியங்களை
மட்டுமல்லாமல் இலக்கணங்களையும் சுவையுடன் நடத்துவார். இத்தகு
பெருமைக்குரியவர்தான் கரந்தை வேங்கடாசலம் பிள்ளை. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மோகனூர் என்ற சிற்றூரில்,1886ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி, அரங்கசாமிப் பிள்ளை - தருமாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
தஞ்சை தூயபேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தனிக்கல்வியாக தமிழ்இலக்கியத்தை கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடமும், தமிழ் இலக்கணத்தை மன்னை காவல்
ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடமும் பயின்றார்.
தமிழவேளின் நண்பரும், கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளருமான கரந்தைக் கவியரசுவேங்கடாசலம் பிள்ளை, திருவையாறு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.
"கரந்தை" என்பது கருந்திட்டைக்குடியின் மரூஉ. மொழிப்பெயர் கரந்தை என்ற பூவின்பெயர். புறத்திணை அடிப்படையில் மீட்டலைக் குறிக்கும். தமிழின் பெருமையையும்வளர்ச்சியையும் மீட்கும் பணியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே தம் வாழ்வாகக்கொண்டு உழைத்தவர் கவியரசு. சங்க அமைச்சராகவும் சங்கத்து இதழாகிய"தமிழ்ப்பொழில்" ஆசிரியராகவும் இரவு பகல் பாராமல் பாடுபட்டவர்.கவியரசு வேங்கடாசலம், கரந்தையில் குடியிருந்தார். நண்பர் ஒருவர், "சாகை கரந்தையில் தானே?'' என்று கேட்டார். சாகை என்ற சொல் (ஜாகை) குடியிருப்பதைக்குறிக்கும், தமிழில் "சாதல்" என்ற பொருளும் தரும். ஆதலால், "ஆம்..ஆம்.. சாகைகரந்தையில்தான்'' என்றார் கவியரசு. சாகை என்றது சாகும்போதும் தமிழ் படித்துச்
சாகும் வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்குத் தொண்டு செய்து வாழ்வேன் என்ற
பொருளில் நகைச்சுவையுடன் கூறினார் எனில், அவர் தமிழ்ப் பற்றை என்னவென்பது?இலக்கணம் என்றாலே பிலாக்கணம் என்று அஞ்சி ஓடினாராம் பாரதியார். இலக்கணம்என்றால் பலாச்சுளை என்று எடுத்துத் தேனில் ய்த்து அளித்தார் கவியரசு.குற்றியலுகரம் என்பது ஒற்றுமை நயம்; உயிர்மெய் என்பது வேற்றுமை நயம் என்னும் கருத்துக்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறினார்.
புதுக்கோட்டை மன்னர், பார்ப்பனர்களுக்கு இலவச வேட்டி சேலை அளித்தார். அதை வாங்கபார்ப்பனப் பெண் மகனுடன் தொடர்வண்டியில் சென்றார். ஆய்வாளர் வந்து சீட்டுக் கேட்டபொழுது, மடியில் மகனை வைத்துக்கொண்டு, "நான் மட்டும் தான், மடியில்இருப்பது சிறுகுழந்தை'' என்றார். அரண்மனையில் பார்ப்பனப் பெண் தனக்குப்புடவையும் தன் குழந்தைக்குத் தனியே சிற்றாடையும், கருவுற்றிருக்கிற தன் வயிற்றைக் காட்டி இன்னொரு சிற்றாடையும் என மூன்று கொடை வாங்கினார். அவர் போட்ட
கணக்கு முதலில் ஒன்றும் ஒன்றும் ஒன்றாகியது! பின் ஒவ்வொன்றாக மூன்று ஆகியது!தனக்கும் குழந்தைக்கும் ஒரு சீட்டு என்பது ஒற்றுமை நயம். மூன்று கொடை வாங்கியது வேற்றுமை நயம் என்றார் கவியரசு. இப்படிப் பாடம் நடத்தினால் இலக்கணம் கசக்குமா?
இன்னொரு நிகழ்ச்சி. உ.வே.சா. ஒரு முறை திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். ந.மு.வே.நாட்டாரும் கவியரசும் சிலப்பதிகார உரை எழுதிக் கொண்டிருந்தனர்.கவியரசின் மாணவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையும், தமிழவேள் உமாமகேசுவரனாரும் அப்போது உடன் இருந்தனர். தேள் கொட்டியதால் மருந்துண்டு தேறிய நண்பர் ஒருவர், "கடித்த வாய்தான் கடுக்கிறது'' என்றார். "கடியும் கடுக்கிறதும் ஒன்றுதானே?'' என்று தமிழவேள் கேட்டார். தமிழ்த்தாத்தா கவியரசரைப் பார்த்தார். கவியரசு தம்
மாணவரைப் பார்த்து, "நீர் சொல்லும்'' என்று தலையாட்டினார். ஒளவை
துரைசாமிப்பிள்ளை, "கடி என்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத் திரிந்து வினை
ஆயிற்று. கடுத்தது காட்டும் முகம் போல்'' என்று கூறினார். தமிழ்த்தாத்தா உடனே, "கவியரசரிடம் இலக்கணம் கற்றவர் என்று நிறுவினீர்கள். எடுத்துக்காட்டுகளுடன் இனிமையான இலக்கணம் கற்பிப்பவர் என்றால் கவியரசுதான்'' என்று பாராட்டினார்.
மேலும், "சீவகசிந்தாமணியை நான் பதிப்பித்தபோது பொறாமையால் பலர் குறை கூறி எழுதினார்கள். ஆனால், உண்மையிலேயே திருத்தங்களை எடுத்துக்காட்டிப் "பெயர் விழையான்" என்ற புனைப்பெயரில் கவியரசு மடல் அனுப்பியிருந்தார். என்னையே திருத்திய பெரும்புலவர் என்ற புகழ் வேண்டாமென்று தன்னடக்கத்தால் பெயர் எழுதவில்லை'' என்று பலவாறு பாராட்டினார் உ.வே.சா.
தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித்தமிழைப் பரப்பியது தான். தமிழவேள்
உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச்சங்க இதழும் கல்லூரியும் தனித்தமிழில் ஊற்றங்கொள்ளக் கவியரசின் எழுத்தும் பேச்சும் தூண்டல் ஆகும். பா.வே.மாணிக்கநாயக்கரும் தனித்தமிழ் பரப்பி வந்தார்.
"பிரேரேபிக்கிறேன்" போய் "முன்மொழிகிறேன்" என்றும், "தீர்மானம்" போய் "முடிவு" என்றும் வந்தன. "போஜனம் ஆயிற்றா! எனக் கேட்பது தமிழ் மரபு'' என்று எழுதிய உ.வே.சா. தமிழ்ப்பொழிலின் எழுத்துத் தாக்குதலுக்கு ஆளானார். "உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம் பேசுங்காலும், எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார்
யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ்வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும்'' என்று "தமிழ்ப் பொழில்" இதழில் கவியரசு எழுதினார்.
ஆங்கிலக் கல்வியால் தமிழ்க் குழந்தைகள் சீர்கெடுகின்றன. இதை,
"ஐந்துவயதிலிருந்தே தங்கு தடையின்றிப் பேசக்கற்றிருந்த தாய்மொழியில் இப்போது பேசுவதற்குத் தம்மால் இயலாது என்கின்றனரே! ஆங்கிலம் படித்த வாழ்வுதான் என்னே!'' என்று வருந்தி எழுதியுள்ளார்.
கரந்தைச் தமிழ்ச்சங்கத்தின் வழியாகவும், திருவையாறு அரசர் கல்லூரியில்
பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெருமக்களையும், தனித்தமிழ்
அன்பர்களையும் உருவாக்கியவர் கவியரசு.
திருவையாறு கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய பெரும்புலவர் ஒருவர், "செந்தமிழ் என்று இக்காலத்தில் கூறுவதால் முக்காலத்தில் கொடுந்தமிழாக இருந்ததுபோலும்''
என்று பேசினார். உடனே அதை மறுத்து, "செஞ்ஞாயிறு இருந்தது என்றால் கருஞாயிறு இருந்தது என்று ஆகுமா? செந்தமிழ் என்றும் செந்தமிழ்தான்; செம்மொழிதான்'' என்று முழங்கியவர் கவியரசு வேங்கடாசலம்.
- ஆசான் ஆற்றுப்படை (தூயபேதுரு பள்ளியில் தம் ஆசிரியராக இருந்த குயிலையா என்னும் சுப்பிரமணிய ஐயர் மேல் இயற்றியது)
- மொழி அரசி - மணிமேகலை நாடகம் - செந்தமிழ்க் கட்டுரைகள் (தமிழ்ப்பொழில் இதழில் வந்த கட்டுரைகள்) என்ற நூல்களையும்,
- அகநானூறு உரை - வேங்கட விளக்கு போன்ற உரை நூல்களையும் படைத்துள்ளார். ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து தொல்காப்பியம் - சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை என்ற நூலையும் பதிப்பித்துள்ளார்.இலக்கண, இலக்கியங்களில் துறைபோகியவரும், சிறந்த மாணவர்களை உருவாக்கியவரும், தமிழுக்குப் பெருமை சேர்த்தவருமான கவியரசர், 1953ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். கரந்தை என்று கூறினாலே கவியரசரின் பெயரும் அவரது தமிழ்த்தொண்டும் தான்அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
--- முனைவர் பா.இறையரசன்
நன்றி:- தினமணி-தமிழ்மணி-04-04-2010
திங்கள், 22 பிப்ரவரி, 2010
தமிழின் எழுச்சி-1
செம்மொழிச் செம்மல்கள் நூல் வெளியீட்டு விழாவில் பேசுகிறார் செம்மல் (கோவிந்தன்)
வணக்கம். '"தமிழைத் தமிழாக்குவோம்" திட்டங்கள் : 1.நேரில் கூடிப் பேசலாம். 2. திட்ட வரையறை தேவை. 3. முதலில் தமிழ்மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்குவன பற்றி மட்டுமே எடுத்துக் கொள்வோம். 4. நன்னன் ஐயாவின் வழியில் - வழிகாட்டுதலில் - தமிழ் மொழி வழக்கில் - பேச்சு வழக்கில் - எழுத்து வழக்கில் அன்றாடம் காணும் பிழைகளைக் களையும் கருத்துக்களைப் பரப்புவோம். 5. தமிழ்வழிக்கல்வி பற்றிய கருத்துப் பரப்பலையும் மேற்கொள்ளலாம். என் வலைப் பூ, ஆய்வுத் தமிழ் குழு ஆகியவற்றைக் காண்க! அன்பிலே,
முனைவர் பா.இறையரசன் 9840416727
***********************************************************************************************************************************************************************************************************
தமிழின் எழுச்சி என்ற வலைப் பூவில் அதன் ஆசிரியர் கோவிந்த கண்ணன் கட்டுரை -1
இன்றைய சூழலில் என்ன இது தமிழின் எழுச்சி காண்போம் என்கிறாரே என்ற ஐயம் ஏற்படுவது
இயல்புதானே! வெளிப்பகையாலும் உட்பகையாலும் தாய்த் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு அச்சம்
கொள்ள வைக்கிறதே!
என் செய்வது ? இதற்கு விடைதான் வலைப்பூவின் தலைப்பு !
வெளிப்பகை :
ஆப்பிரிக்காவுக்கும், பிரிட்டிஷ் கயானவுக்கும் , அடிமைகளாக அனுப்பப்பட்ட தமிழர் இன்று தம் இன
அடையாளம் இழந்ததை மறக்க முடியாது. பர்மாவிலிருந்து விரட்டப்பட்ட தமிழர் நிலையும்
அவ்வண்ணமே! மற்றும் அரை நூற்றாண்டுக்கு மேலாக ஈழத்தமிழரை அழித்தொழித்து, பிஞ்சுக்
குழந்தைகளும், பெண்டிரும்,முதிர்வடைந்தோரையும் பாகுபாடின்றி கன- ரக ஆயுதங்களைக்கொண்டு
சென்ற ஆண்டு பொசுக்கி மகிழ்ந்தனரே ! சாஸ்திரி - சிறிமாவோ இணைந்து இலங்கைத்
தேயிலைத்தோட்ட தமிழ்த் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பினார்களே ! பம்பாயிலிருந்தும்,
அருகிலே பங்களுருவிலிருந்தும் தமிழர்கள் உதைத்து விரட்டப்பட்டார்களே !
உட்பகை :
உட்பகையால் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தினால் வந்த ஆபத்து , தமிழ் கலந்த ஆங்கிலமாக,
இல்லை இல்லை ஆங்கிலமும் சிறிது தமிழும் பேசும் நிலை இன்று உள்ளது. நமது வீட்டிற்குள்ளும்
தொலைக்காட்சி வழியே வந்தும் விட்டது. தமிழ் பேசும் அனைவர் ஒற்றுமை கருதிப் பிற உட்பகை
பற்றி கூறாது விடுகிறேன். பின் எவ்வாறு தமிழ் இன்றளவும் வாழ்கிறது ? "தமிழினி மெல்லச்சாகும்
என்றவன் பேதை!" என்றானே மீசைக் கவி ? அவன் கூறி 80 - ஆண்டுகள் சென்றும் பாரதி
சொன்னது உண்மைதானே ! இன்னும் சாகவில்லையே ! ஏன் ? தமிழின் வலிமைதான் காரணம் ஆகும்.
தமிழ் நாட்டு வரலாறு மறைக்கப்படும் அவலம் :
தமிழ் நாட்டுவரலாறு நம் தமிழர் உலகின் தொல்குடியாய் இருந்தும் நம் பள்ளிகளிலும், ஏன்
கல்லூரிகளின் வரலாற்றுப் பட்டப்படிப்பிலும் கூட ( சில பல்கலைக்கழகங்கள் தவிர) மறுக்கப்படும்-
மறைக்கப்படும்- அவலநிலை இன்றும் நீடிக்கிறது.
சனி, 23 ஜனவரி, 2010
சி.வை.தாமோதரர்

[Enter Post Title Here]
தமிழ்த் தாத்தாவுக்குத் தாத்தா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தமிழிலக்கியங்களைப் பனை ஓலைகளில் எழுதிப் பாதுகாத்து வைத்திருந்தனர் நம் முன்னோர். மேலை நாட்டார் வரவால் அச்சுக் கருவிகள் வந்தன. இந்தியாவிலேயே முதன் முதலாக அச்சில் தமிழ் இடம் பெற்றது. கிறித்துவ நூல்கள் தமிழில் அச்சிடப் பெற்றபோது சைவ சமய நூல்கள் வெளிவர வேண்டும் என்று ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் அச்சகம் தொடங்கினார். பதிப்புப் பணியில் அவரைப் பின்பற்றி உருவானவர்தான் சி.வை.தாமோதரம் பிள்ளை.
அவர் பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம்வாழ்நாளின் நோக்கமாகக் கொண்டிருந்தார். இரவு பகல் பாராது நாடு முழுவதும் சுற்றி ஏடுகளைத்தேடிக் கண்டுபிடித்து அச்சில் பதிப்பித்துத் தமிழ் இலக்கியங்களை வாழவைத்தார். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு முன்னோடி ஆவார்.
தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி
மக்கள் பனை ஓலைச் சுவடிகளைப் பரண் மேல் வைத்திருந்தனர் .தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் குறைவு. தெரிந்தாலும் படிப்பார் இல்லை. பாதுகாப்பாரும் இல்லை. இவை போதாவென்று மூட நம்பிக்கையால், வீட்டுப் பரண்களில் கிடக்கும் ஓலைச் சுவடிகளை அள்ளி ஆடிப் பதினெட்டாம் பெருக்கன்று ஆற்றிலும், பொங்கலுக்கு முதல் நாள் தீயிலும் போட்டு அழித்தனர்.மக்களுக்கோ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வில்லை; செல்வர்க்கோ உதவ வேண்டும் என்ற மனமில்லை; " துரைத்தனத்திற்கோ அதன் மேல் இலட்சியமில்லை" என்று வருந்தினார் சி.வை.தா.
'தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?' -எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார். நீர்வாய்ப் பட்டும் , தீவாய்ப்பட்டும் , செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை , அரிதின் முயன்று தேடிப் பிடித்து அச்சிட்டுக் காத்தார் . சி . வை . தா . தமது இருபதாவது அகவையிலேயே ( வயதிலேயே ) ` நீதிநெறி விளக்கம் ' எனும் நூலை உரையுடன் முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் அச்சில் பதிப்பித்து வெளிக்கொண்டுவந்தார் .
ஏடு பதிப்பிக்கும் இடர்
ஏட்டிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துகளைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். தவறின்றி அச்சில் வெளியிடத் தனிப்புலமை வேண்டும். எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே துண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துகளோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் - பாணக்கலப்பை உழுது - இராமபாணம் என்னும் செல்லுப்பூச்சிகள் அரித்துக் கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளைப் பிரித்துப் படியெடுத்துச் , சொற்களைச் சரியாக அடையாளங் கண்டு, பதிப்பித்தார்.ஏடுகளைப் படித்து ஆராய்ந்து, பிழையின்றிப் படிஎடுக்கிறபோது சில ஐயங்கள் தோன்றிவிடும். அவற்றைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காததால் மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் .
தில்லைப் பார்ப்பனர்கள் தேவாரப்பாடல்களைப் பூட்டி வைத்துச் செல்லரிக்கவிட்டு எஞ்சியவற்றைப் போராடி மீட்டான் பேரரசன் இராசராச சோழன். தமிழ்ச் சங்கங்களையும் இழந்து, உலக அளவிலான மொழி இலக்கண நூல்களில் தொன்மையானதும் சிறப்பானதும் ஆகிய தொல்காப்பியத்தின் பொருளதிகார ஏட்டுச்சுவடிகளையும் இழந்து தவித்தான் பாண்டிய மன்னன். அந்தப் பொருளதிகாரத்தை மீட்டவர் சி.வை.தா.
'தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகண்ட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்' - எனத் தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் எழுதியுள்ளார் சி.வை.தா.
தமிழ்த் தாத்தாவுக்குத் தந்தவர்
திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில் வழிகாட்டியாக அமைந்தார். "பதிப்புத்துறைக்கு ஆறுமுக நாவலர் கால்கோள் நாட்டினார்; தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார்; உ.வே.சா. மேற்கூரை இட்டார் என்று திரு.வி.க. கூறுவார்.
தமது ஓய்வு நேரத்தைத் தமிழ் ஆராய்ச்சியிற் பெரும்பாலும் செலவிட்டு, வீரசோழியம், தொல்காப்பியச் சொல்லதிகாரம், தொல்காப்பியப் பொருளதிகாரம் , கலித்தொகை , இறையனார் அகப்பொருள் , இலக்கண விளக்கம் என்பனவற்றின் மூலங்களையும் , உரைகளையும் பல ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு பரிசோதித்து முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டவர் இவரே . இக்காலத்தில் தமிழில் பல துறைகளில் ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருந்துணையாக இருப்பன இவர் வெளியிட்ட புத்தகங்களாகும் . இவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன் ." என்று உ.வே . சாமிநாதையர் பாராட்டியுள்ளார் .
சீவக சிந்தாமணி நூலை உ . வே . சா . அவர்கள் 1887- இல் வெளியிடுவதற்கு உதவியாக அதன் ஏட்டுப் பிரதிகள் இரண்டினைத் தாமோதரனார் அவருக்குக் கொடுத்து உதவியுள்ளார் . சிந்தாமணியை அச்சிடத் தாள் கிடைக்காமல் உ . வே . சா தவித்தபோது , சி . வை . தா . தமக்குத் தெரிந்த ஒரு தாள்வணிகர் மூலம் கடனில் பெற ஏற்பாடு செய்தார்
.
ஆசிரிய மாணவர்
பெர்சிவல் குருமாரிடம் ஆங்கிலக் கல்வி படித்து, அவருக்கே தமிழ் ஆசிரியரானவர் ஆறுமுக நாவலர். பெர்சிவல் அவரைக் கொண்டு தமிழில் விவிலியத்தை (பைபில்) வெளியிட்டார்; மேலும் சி.வை.தா., கறோல் விசுவநாதப்பிள்ளை ஆகியோர் உழைத்துச் செய்த ஆங்கிலம்- தமிழ் அகராதி, திருஷ்ட்டாந்த சங்கிரகம் ( 2000 ப்ழமொழிகளின் தொகுப்பு) ஆகியவற்றையும் வெளியிட்டார்.பின் சென்னைக்குக் குடியேறி, 'தினவர்த்தமானி' எனும் வாரஇதழை நடத்தி வந்தார். அவர் தாமோதரம்பிள்ளையைச் சென்னைக்கு அழைத்து இதழில் முதலில் துணை ஆசிரியர் பணியும் பின் ஆசிரியர் பணியும் அளித்தார். சி.வை.தா. ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தார். இதழ் ஆசிரியராகவும், கல்லூரித் தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்று, முதன் முதலாகத் தொடங்கிய இளங்கலை (பி. ஏ.) தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார்.
20ஆம் நூற்றாண்டைத் தொடங்கித் தான் முடிந்தவர்
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய லீலாவதி, சுலோசனை (1896) ஆகிய இரண்டு நாடக நூல்களிலிருந்து ஐம்பது பக்கங்களைச் சென்னைப் பல்கலைக்கழக நுழைமுக (எப்.ஏ.) தேர்வுக்குப் பாடமாக வைப்பதற்குப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையைத் தாமோதரம்பிள்ளை ஒப்புக் கொள்ளச் செய்தார். சென்னைப் பல்கலைக்கழகம் தற்காலத் தமிழ் நாடக நூல் ஒன்றைத் தேர்வுக்குப் பாடமாக வைத்தது அதுவே முதல் முறை .சி.வை.தா. சாப்பிட்டு முடிக்கும்போது இலையில் கடைசியாக மீந்து உள்ள ஊறுகாய் , உப்பு , சோறு , தொடுகறி எல்லாவற்றையும் ஒரு கவளமாக்கி விழுங்கி விடுவாராம்.அத்துடன் மிகுதியாக புகைத்து, அதனால்தான் செரிமானம் ஆகிறது என்பாராம். இத்தவறான கருத்து இருந்தாலும், . நீரிழிவு நோயாளியான சி . வை . தா . எழுபது அகவை வரை வாழ்ந்து தொல்காப்பியத்தையும் கலித்தொகையையும் அறிமுகம் செய்து , சங்கத்தமிழிலக்கிய தேடலைத் தொடங்கிவைத்து 20 ஆம் நூற்றாண்டு தொடங்கும் நாளில் ( 01 - 01 - 1901) தான் முடிந்தார் .
88888888888888888888888888888888888888888888888888888
சி.வை.தாமோதரம் பிள்ளை
1.இயற்பெயர் . . . . . . . தாமோதரன்
2,சிறப்புப்பட்டம்.............. இராவ் பகதூர் (1895,ஆங்கில அரசு அளித்தது )
3. பெற்றோர் ..................... பெருந்தேவி அம்மாள், வைரவநாதப்பிள்ளை
4. பிறந்த நாள் .................. 12 - 09 - 1832.
5. மறைந்த நாள் ............ 01 - 01 - 1901.
6. ஊர் ......................... இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுபிட்டி
7. கல்வி ....................... வட்டுக்கோட்டை : பள்ளிக்கல்வி.
சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயர், கறோல் விசுவநாதப் பிள்ளை--ஆகியோரிடம் தமிழ்க் கல்வி.
யாழ்ப்பாணம்: செமினறி சாத்திரக் கலாசால
சென்னைப் பல்கலைக் கழகம்: நுழைமுகத் தேர்வு (1857),
இளங்கலை (1858) சட்டப்படிப்பு (1871)
8.பணி ........................... கோப்பாய்: போதனா சக்தி (ஆசிரியப் பயிற்சி)க்
கல்லூரி:ஆசிரியர்.(1852), சென்னை இராசதானி
(மாநில)க் கல்லூரி : தமிழாசிரியர்(1853- )
கள்ளிக்கோட்டை: அரசுக்கல்லூரி:தலைமை ஆசிரியர் (1858- )
சென்னை அரசு: வரவுசெலவுக் கணக்கு நிலையத் தலைவர்
கும்பகோணம் : வழக்குரைஞர் (1871- )
புதுக்கோட்டை: நீதிமன்றத் தலைவர் (1884- 1890)
இதழாசிரியர்: தினவர்த்தமானி (1853 - ), உதயதாரகை.
9. படைப்புகள் ............... கட்டளைக் கலித்துறை, சைவ மகத்துவம்,
நட்சத்திர மாலை, சூளாமணி வசனம்,
ஆதியாகம கீர்த்தனம், காந்தமலர் அல்லது
கற்பின் மாட்சி' (புதினம் :நாவல்),
சிறுவர்களுக்கான பாடநூல்கள்.
10. பதிப்பித்தவை ...... . நீதிநெறி விளக்கம் -உரையுடன்( 1853 )
தொல்காப்பியச் சொல்லதிகாரம்- சேனாவரையர் உரை ,
தொல்காப்பிய எழுத்திகாரம்- நச்சினார்க்கினியருரை
தொல்காப்பியப் பொருளதிகாரம்- நச்சினார்க்கினியருரை,
வீரசோழியம், திருத்தணிகைப் புராணம்,
இறையனார் அகப்பொருள், கலித்தொகை,
இலக்கண விளக்கம், சூளாமணி.
வியாழன், 21 ஜனவரி, 2010
பாரதியார்

பொருளாதாரத்தில் சமத்துவமும் சாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும் கல்வியில் மேன்மையும் பெண்கள் முன்னேற்றமும் அரசியல் விடுதலையும் ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்கப் பாரதியார் விரும்பினார்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கொள்கை உடைய பாரதியார், இந்தியாவின் பல கோடி மக்களும் கடைக் கோடி ஏழையும் சமம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனப் பாடினார். அனைவருக்கும் விடுதலை, அனைவருக்கும் உணவு , ஆங்கோர் ஏழைக்கும் எழுத்தறிவு என அனைவருக்கும் கல்வி என்ற ஒப்பில்லாத சமுதாயம் காணப் பொதுவுடைமை வேண்டும் என்று பாரதியார் முழங்கினார்.
மெத்த வளரும் மேலை நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழி பெயர்ப்போம், நம் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தளித்துத் திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடச் செய்வோம் என்றார் பாரதியார்.
ஊசி செய்வது முதல் கப்பல் கட்டும் தொழில் வரை நம் நாட்டு இளைஞர்களைக் கற்கச் செய்வோம். ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி அ ..ஆ.. எனக் கற்பித்துத் தமிழ் படிக்கச் செய்வோம். வெற்றுப் பணக் கல்வியை விட தொழில் திறமையும் பண்பும் தரும் நாட்டுக்கல்வியே உயர்ந்தது என்பன பாரதியாரின் கொள்கைகள்.
ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தைப் பரப்பிய பாரதியார், அதற்குக் கல்வியே உறுதுணை என்றார். பட்டங்கள் பெறுவதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்களை முழங்கவைத்தார்.
மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து, கடவுள் பக்தியுடன் உண்மையான ஆன்மிகத்தைப் பின்பற்றி வாழ வேண்டும் என்ற பாரதியார், வன்முறைகளால் எதனையும் சாதிக்க முடியாது என்றார். எதிரிக்கும் இரக்கம் காட்டச் சொன்னவர், காக்கை குருவி எங்கள் சாதி என்று கூறியதுடன் உலகுக்கே வழிகாட்டும் திறன் இந்தியாவிற்குத்தான் உண்டு என்று பாடினார். பாரதியார் கண்ட சமுதாயம் படைப்போம்.
**********************************************
சனி, 7 நவம்பர், 2009
ஆய்வுத்தலைப்புகள்
கொங்கு தேர்வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ!
அன்பார்ந்த ஆய்வாளர்களே! வணக்கம். இவ்விதழ் ஆய்வியலை வளர்க்கத் தோன்றியதாகும். தமிழியலில் ஆய்வுத்துறை வளர்ந்து கொண்டே உள்ளது. அவ்வளர்ச்சி அவ்வப்போது தமிழியலார்க்குக் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்களுக்கு உரிய தரவுகளும் ஆவணங்களும் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்கள் எனும்போது ஆசிரியப் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் அடங்குவர்.
தமிழ் மொழிபற்றிய துறை தமிழ்த்துறை என்றில்லாமல் தமிழிலக்கியம் பற்றிய துறை என்பதான எண்ணம் வரக்காரணம் தனியே மொழியியல் என்ற துறை மிக விரைவாக வளர்ந்ததுதான். ஆனால் இதே போல வளர்ந்த இதழியல், சுற்றுலாவியல் முதலிய துறைகளும் தமிழோடு தொடர்புடையன என்பதைத் தமிழ்த்துறையினர் உணர்ந்ததால் தமிழியல் துறை ஆயிற்று.
தமிழ் படிக்கும் மாணவர்களும் தமிழ் ஆசிரியர்களும் இன்றைக்கு வளர்ந்துவரும் துறைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தமிழறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியன், வ.அய். சுப்பிரமணியன், மா.நன்னன், க.ப.அறவாணன், பொற்கோ, வா.செ.குழந்தை சாமி முதலியோர் வலியுறுத்துவர்.
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் தரும். காதல் என்றும் பொருள் தரும். தமிழ் என்னும் சொல்லைத் தமிழ் மொழியைக் குறிக்கவும், தமிழ் நாட்டைக் குறிக்கவும், தமிழ் இனத்தைக் குறிக்கவும், சங்ககாலம் முதலே வழங்கி வருகின்றனர். எனவே தமிழியல் என்பதில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் என்பவை மட்டுமல்லாமல் தமிழ் மொழியையும் நாட்டையும் இனத்தையும் சார்ந்த வரலாறு, நாகரிகம், பண்பாடு, இதழியல், மொழியியல், சுற்றுலாவியல், சமயவியல், மெய்மையியல், கலையியல், (ஓவியம், சிற்பம், கட்டடம், இசை, நாடகம், திரைப்படம் முதலியன) போன்ற அனைத்துமே உள்ளடக்கம்தான்.
தமிழில் நான்காம் தமிழாக அறிவியல் தமிழைச் சேர்க்க வேண்டும் என்று முனைவர் ந.சஞ்சீவி கூறினார். அறிவியல், அறவியல் என அனைத்தையும் இயல்தமிழ் கொண்டதுதான். இன்று வளர்ந்துவரும் கணிப்பொறியியலும் இதிலடங்கியதுதான். இத்துறையையும் உலகம் முழுவதும் வளர்த்து வருவது நம் தமிழ் இளைஞர்கள்தான். இணையத்திலும் ஆங்கில மொழியை அடுத்து தமிழே அதிக அளவில் இடம் பெற்றுவருகின்றது.
இவ்வாறு மிகவிரைவாகப் பல துறைகளிலும் பல திக்குகளிலும் பல வகைகளிலும் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்ற தமிழை – தமிழியலின் ஆழ அகல உயர்வு நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான ஆசிரியரின் ஆய்வாளரின் கடமை. இதற்கு உதவுவதற்காகவே இவ்விதழ் தொடங்கப் பெறுகின்றது.
ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கும் போது சந்திக்கின்ற முதல் சிக்கல் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதுதே. ஆய்வுக்களத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது, இனி என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலிருந்தும் தலைப்புகைளத் தொகுத்து முனைவர் தமிழண்ணல் ஓரு நூல் வெளியிட்டுப் பல ஆண்டுகளாயிற்று. அடுத்து நிகழ்ந்த ஆய்வுகளின் தலைப்புகளை இன்றுவரை தொகுத்தும் நிறைவடையவில்லை. ஆய்வில் நிறைவில்லை என்பது உண்மை.
எனினும் முடிந்தவரை-மிக அதிகமான உழைப்பின் இறுதி எல்லையில் இயன்ற அளவிலான அதிகப்படியான நிறைவை அடைந்துதான் தீரவேண்டும். அதற்குக் கூட்டு முயற்சி தேவை. அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்கள் தாங்களாக மனமுவந்து இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறோம். தாங்கள் பல பணிகளுக்கிடையே இதனையும் ஆய்வுக் கடமையாகவும் தமிழ் மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டாகவும் கருதி ஈடுபட அழைக்கின்றோம்.
கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர்களும் தமிழன்பர்களும் தனிப்பட்ட ஆய்வாளர்களும் இதழியல் துறையிலிருந்தும் பதிப்புத் துறையிலிருந்தும் கணிப்பொறித் துறையிலிருந்தும் பிற துறைகளிலிருந்தும் தமிழ்ப்பணி செய்வோரும் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உடனடியான உங்கள் பங்கேற்பு மடலைத்தான்.
முனைவர்.பா.இறையரசன். தி.ஆ.2036, ஆவணி (செப்தம்பர்,2005)
############################################################################
செப்தம்பர் 2009 -உம் கடந்தது. ஒரு சிலர் மட்டுமே விடை மடல் எழுதினர். தமிழர் நிலை இதுதான். பார்ப்போம். பார்ப்போம்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ!
அன்பார்ந்த ஆய்வாளர்களே! வணக்கம். இவ்விதழ் ஆய்வியலை வளர்க்கத் தோன்றியதாகும். தமிழியலில் ஆய்வுத்துறை வளர்ந்து கொண்டே உள்ளது. அவ்வளர்ச்சி அவ்வப்போது தமிழியலார்க்குக் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்களுக்கு உரிய தரவுகளும் ஆவணங்களும் கிடைக்க வேண்டும். ஆய்வாளர்கள் எனும்போது ஆசிரியப் பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் அடங்குவர்.
தமிழ் மொழிபற்றிய துறை தமிழ்த்துறை என்றில்லாமல் தமிழிலக்கியம் பற்றிய துறை என்பதான எண்ணம் வரக்காரணம் தனியே மொழியியல் என்ற துறை மிக விரைவாக வளர்ந்ததுதான். ஆனால் இதே போல வளர்ந்த இதழியல், சுற்றுலாவியல் முதலிய துறைகளும் தமிழோடு தொடர்புடையன என்பதைத் தமிழ்த்துறையினர் உணர்ந்ததால் தமிழியல் துறை ஆயிற்று.
தமிழ் படிக்கும் மாணவர்களும் தமிழ் ஆசிரியர்களும் இன்றைக்கு வளர்ந்துவரும் துறைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதைத் தமிழறிஞர்கள் ச.வே.சுப்பிரமணியன், வ.அய். சுப்பிரமணியன், மா.நன்னன், க.ப.அறவாணன், பொற்கோ, வா.செ.குழந்தை சாமி முதலியோர் வலியுறுத்துவர்.
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் தரும். காதல் என்றும் பொருள் தரும். தமிழ் என்னும் சொல்லைத் தமிழ் மொழியைக் குறிக்கவும், தமிழ் நாட்டைக் குறிக்கவும், தமிழ் இனத்தைக் குறிக்கவும், சங்ககாலம் முதலே வழங்கி வருகின்றனர். எனவே தமிழியல் என்பதில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் என்பவை மட்டுமல்லாமல் தமிழ் மொழியையும் நாட்டையும் இனத்தையும் சார்ந்த வரலாறு, நாகரிகம், பண்பாடு, இதழியல், மொழியியல், சுற்றுலாவியல், சமயவியல், மெய்மையியல், கலையியல், (ஓவியம், சிற்பம், கட்டடம், இசை, நாடகம், திரைப்படம் முதலியன) போன்ற அனைத்துமே உள்ளடக்கம்தான்.
தமிழில் நான்காம் தமிழாக அறிவியல் தமிழைச் சேர்க்க வேண்டும் என்று முனைவர் ந.சஞ்சீவி கூறினார். அறிவியல், அறவியல் என அனைத்தையும் இயல்தமிழ் கொண்டதுதான். இன்று வளர்ந்துவரும் கணிப்பொறியியலும் இதிலடங்கியதுதான். இத்துறையையும் உலகம் முழுவதும் வளர்த்து வருவது நம் தமிழ் இளைஞர்கள்தான். இணையத்திலும் ஆங்கில மொழியை அடுத்து தமிழே அதிக அளவில் இடம் பெற்றுவருகின்றது.
இவ்வாறு மிகவிரைவாகப் பல துறைகளிலும் பல திக்குகளிலும் பல வகைகளிலும் பல்கிப் பெருகி வளர்ந்து வருகின்ற தமிழை – தமிழியலின் ஆழ அகல உயர்வு நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையான ஆசிரியரின் ஆய்வாளரின் கடமை. இதற்கு உதவுவதற்காகவே இவ்விதழ் தொடங்கப் பெறுகின்றது.
ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கும் போது சந்திக்கின்ற முதல் சிக்கல் தலைப்பைத் தேர்ந்தெடுப்பதுதே. ஆய்வுக்களத்தில் இதுவரை என்ன நடந்துள்ளது, இனி என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். அனைத்துப் பல்கலைக் கழகங்களிலிருந்தும் தலைப்புகைளத் தொகுத்து முனைவர் தமிழண்ணல் ஓரு நூல் வெளியிட்டுப் பல ஆண்டுகளாயிற்று. அடுத்து நிகழ்ந்த ஆய்வுகளின் தலைப்புகளை இன்றுவரை தொகுத்தும் நிறைவடையவில்லை. ஆய்வில் நிறைவில்லை என்பது உண்மை.
எனினும் முடிந்தவரை-மிக அதிகமான உழைப்பின் இறுதி எல்லையில் இயன்ற அளவிலான அதிகப்படியான நிறைவை அடைந்துதான் தீரவேண்டும். அதற்குக் கூட்டு முயற்சி தேவை. அனைத்துப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்கள் தாங்களாக மனமுவந்து இப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறோம். தாங்கள் பல பணிகளுக்கிடையே இதனையும் ஆய்வுக் கடமையாகவும் தமிழ் மொழிக்குச் செய்யும் உண்மையான தொண்டாகவும் கருதி ஈடுபட அழைக்கின்றோம்.
கல்லூரிகளில் உள்ள தமிழ்த்துறைத் தலைவர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பள்ளிகளில் உள்ள தமிழாசிரியர்களும் தமிழன்பர்களும் தனிப்பட்ட ஆய்வாளர்களும் இதழியல் துறையிலிருந்தும் பதிப்புத் துறையிலிருந்தும் கணிப்பொறித் துறையிலிருந்தும் பிற துறைகளிலிருந்தும் தமிழ்ப்பணி செய்வோரும் இணைந்து பணியாற்ற அழைக்கின்றோம். உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது உடனடியான உங்கள் பங்கேற்பு மடலைத்தான்.
முனைவர்.பா.இறையரசன். தி.ஆ.2036, ஆவணி (செப்தம்பர்,2005)
############################################################################
செப்தம்பர் 2009 -உம் கடந்தது. ஒரு சிலர் மட்டுமே விடை மடல் எழுதினர். தமிழர் நிலை இதுதான். பார்ப்போம். பார்ப்போம்!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.
வியாழன், 5 நவம்பர், 2009
கண்ணகி

கண்ணகி சிலை
கரடி பொம்மையா? நீல் சிலையா?
###################################################################
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
அறம், கூற்று, பத்தினி, ஊழ்வினை, உயர்ந்தோர், இவற்றில் எதையாவது கழகத்தார் நம்புகிறார்களா?
அதிலும் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பதை யார் தான்
நம்புகிறார்கள்?
கண்ணகி தமிழச்சி. கைம்பெண். சமணர். நாடு விட்டு நாடு வந்து ஒரு கலக்கு கலக்கி
விட்டிருக்கிறாள். எதற்காகக் கண்ணகிக்குச் சிலை வைத்தார்கள்?
எதற்காகக் கண்ணகியின் சிலையை இடித்தார்கள்?
வைத்தவர்களும், இடித்தவர்களும் ஒரே காரணத்துக்குக்காகத்தான் மோதிக்
கொண்டிருக்கிறார்களோ!
தீத்திறத்தார் பக்கமே சேர்க என்று சபித்து ஊரைக் கொளுத்தியவள் பெண்ணடிமைக்குச் சின்னமாமே! மதுரையைக் கொளுத்த அவளுக்கு என்ன உரிமை என்று கொதிக்கிறார்கள் பெண்ணுரிமைவாதிகள். அனுமனும், இராமனும், சீதையும் இவர்கள் நெற்றிக்கண்ணிலிருந்து தப்ப முடியுமா?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
###################################################################
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)